காவிரித் தாய்க்கு பெண்கள் பொங்கல் வைத்து பூஜை
கும்பகோணம்: காவிரிப் பிரச்சினை விரைவில் தீரவும், காவிரியில் நீர் வரவும் வேண்டி கும்பகோணத்தில் காவிரி அன்னைக்குபெண்கள் பூஜை, அபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டனர்.
கும்பகோணத்தில் உள்ள காவிரிப் படித்துறைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கூடி பூஜை நடத்தினர்.
பொங்கல் வைத்து, பாலாபிஷேகம் உள்பட பல அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்து அவர்கள் காவிரித்தாயை வழிபட்டனர்.
பின்னர் வாழை மட்டையில் செய்த ஒரு ஓலையில் தீபம் ஏற்றி ஆற்றில் மிதக்க விட்டனர்.
விரைவில் காவிரிப் பிரச்சினை தீரவும், காவிரியாற்றில் தண்ணீர் பொங்கிப் பெருகி ஓடவும் வேண்டி இந்தப் பூஜைநடந்தது.
இதற்கிடையே கர்நாடகத்தின் மைசூர் நகரிலும் இதுபோன்ற ஒரு பூஜை நடந்தது. கர்நாடக அணைகளில் நன்றாகமழை பெய்ய வேண்டுமென்று வருண பகவானை வேண்டி அப்பகுதியில் உள்ள பிராமணர்கள் ஹோமம்நடத்தினர்.
ஹோமம் முடிந்த கையோடு காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள்போராட்டத்திலும் குதித்தனர்.












Click it and Unblock the Notifications