இமாம் அலி சுட்டு கொலை: போலீஸ் அதிகாரியின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
கோயம்புத்தூர் - பெங்களூர்:
இமாம் அலியைச் சுட்டுக் கொன்ற தமிழக போலீசின் சிறப்பு அதிரடிப் படைக்கு தலைமை வகித்த கோவை மாவட்ட டி.ஐ.ஜி.அசுதோஷ் சுக்லாவின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்தப் படையில் இருந்து மிகத் தீவிரமாக செயல்பட்ட மதுரை துணை கமிஷ்னர் ஷகீல் அக்தருக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
சுக்லாவின் வீட்டிலும் அலுவலகத்திலும் ஏ.கே-47 துப்பாக்கிகள் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுளளனர்.
இதற்கிடையே இமாம் அலியின் உடலைப் பெற்றுக கொள்வதற்காக அவரது சகோதரி குர்ஷித் பேகமும் அவரது கணவர் ஹமீத்பக்ரியும் இன்று பெங்களூர் வந்துள்ளனர்.
அதே போல அலியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட சீனியப்பாவின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது தந்தையும், சீனியப்பாவின்மனைவி யாஸ்மீனின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது சகோதரரும் பெங்களூர் வந்தனர்.
அதே போன்று இப்ராகிமின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது உறவினர்களும் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சஞ்சய்நகர் காவல் நிலையத்தில் காத்துள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரின் உடல்களும் பெங்களூர் ராமையா மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று பிரேதப்பரிசோதனை முடிந்தவுடன் இவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இந் நிலையில் இமாம் அலியுடன் தொடர்பு வைத்திருந்த நபர்களுக்கு போலீசார் வலை வீச ஆரம்பித்துள்ளனர். அலியும் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளிகளும் மதுரை, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு போலீஸ்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பஸ்கள் மீது இருவர் கல்வீச்சுத் தாககுதல் நடத்தினர். இவர்கள்இமாம் அலியின் ஆதரவாளர்கள் என்று தெரிகிறது. இது குறித்தும் வழக்குப் பதிவு செய்து அந்த சமூக விரோதிகளை போலீசார்தேடி வருகின்றனர்.
-->
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications