அக்டோபர் 4ல் வைகோ விடுதலை?
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் ஒருவரை மொத்தம் 90 நாட்கள் தான் நீதிமன்றக் காவலில் வைக்க முடியும் என்பதால்,வரும் அக்டோபர் 4ம் தேதி வைகோ விடுவிக்கப்படுவாரா அல்லது புதிய வழக்கு ஏதாவது அவர் மீதுதொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கட்சிப் பிரமுகர்களும் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் விசாரணையின்றி 90 நாட்கள் வரை மட்டுமே சிறையில்அடைக்கப்பட்டிருக்கலாம். வைகோவும், அவரது கட்சியினரும் கைது செய்யப்பட்டு 84 நாட்களை சிறையிலேயேகழித்து விட்டனர். இதுவரை குற்றப் பத்திரிக்கை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. நீதிமன்றத்தில் விசாரணையும்தொடங்கவில்லை.
இந்நிலையில் வைகோவும், மதிமுக பிரமுகர்கள் 8 பேரும் இன்று சென்னை-பூந்தமல்லி சிறப்பு பொடாநீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
சிறையில் 84 நாட்களை கழித்து விட்டதால் எஞ்சிய 6 நாட்கள் வரை மட்டுமே அவர்களது சிறைக் காவலைநீட்டிக்க (அதாவது அக்டோபர் 4ம் தேதி வரை) நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அக்டோபர் 4ம் தேதி வைகோவும் மற்றவர்களும் விடுவிக்கப்படுவர்கள் என்று தெரிகிறது.
ஆனால், அவர்கள் மீது புதிதாக ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அந்த வழக்கின் கீழ் வைகோ மற்றும் 8பேரின் சிறைக் காவலை நீட்டிக்க முடியும். தமிழக அரசு இதைச் செய்ய நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன.
வைகோ பேட்டி:
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ.
தாய்லாந்தில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த முதல் கட்டப் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்ததன் மூலம்அந் நாட்டுத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க ஆரம்பமாகிவிட்டது.
காவிரி விவகாரத்தில் விவசாயிகளைத் தூண்டிவிட்டு உச்ச நீதிமன்றத்தை அவமதித்து தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் துரோகம்செய்து வருகிறது. காவிரி விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு முன் எதிர்க் கட்சிகளை முதல்வர் ஜெயலலிதா கலந்து ஆலோசித்திருக்கவேண்டும் என்றார்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications