லண்டனில் 12ம் தேதி டோனி பிளேர்- வாஜ்பாய் சந்திப்பு
லண்டன்:
தீவிரவாதத்துக்கு எதிராக இங்கிலாந்துடன் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்த வரும் 11ம் தேதி பிரதமர் வாஜ்பாய்லண்டன் செல்கிறார்.
12ம் தேதி இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேருடன் வாஜ்பாய் பேச்சுவார்த்தை நடத்துகிறார். கடந்த ஓராண்டில் இருதலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது இது 4வது முறையாகும்.
முன்னதாக 7ம் தேதி வாஜ்பாய் டெல்லியில் இருந்து புறப்படுகிறார். 8ம் தேதி சைப்ரஸ் தலைநகர் நிகோசியா செல்லும் வாஜ்பாய்அந் நாட்டு அதிபர் கிளாப்கோஸ் கிளரிட்ஜசுடன் பேச்சு நடத்துகிறார். ஐ.நாவில் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தரஉறுப்பினர் அந்தஸ்து தர சைப்ரஸ் ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
9ம் தேதி வாஜ்பாய் டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகன் செல்கிறார். அங்கு இந்திய- ஐரோப்பிய யூனியன் மாநாட்டில்பங்கேற்கிறார். 11ம் தேதி லண்டன் செல்கிறார்.
பிளேருடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது இங்கிலாந்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு வாங்கவுள்ள ஹாக் போர்பயிற்சி ஜெட் விமானங்கள் குறித்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவுக்கு ரஷ்ய ரேடார் ஹெலிகாப்டர்கள்:
இந் நிலையில் வானில் இருந்தபடியே எதிரிநாட்டு விமானங்களைக் கண்டறியும் அவாக்ஸ் ரேடார்கள் பொறுத்தப்பட்ட நவீனகமோவ் கே-31 ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்குத் தர ரஷ்யா முன் வந்துள்ளது.
இந்திய கடற்படைக்கு இந்த ரகத்தைச் சேர்ந்த 9 ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்க உள்ளது. 110 முதல் 115 கி.மீ தொலைவில்வரும் எதிரிநாட்டு விமானங்கள், ஹெலிகாப்டர்களை இந்த ஹெலிகாப்டர்களால் கண்டுபிடிக்க முடியும். ஒரே நேரத்தில் 200விமானங்களை இதனால் அடையாளம் காண முடியும்.
அதே போல 200 கி.மீ. தொலைவில் உள்ள எதிரி நாட்டு கப்பல்களையும் கண்டுபிடிக்க முடியும்.
ஐ.என்.எஸ். விராட் விமானம் தாங்கிக் கப்பலிலும் இந்தியாவுக்காக ரஷ்யாவில் கட்டப்பட்டு வரும் கிர்வாக் ரக போர்கப்பல்களிலும் இந்த ஹெலிகாப்டர்கள் நிலை நிறுத்தப்படும்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications