விண்வெளி மையம், கிருஷ்ணர் ஆலயத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த இமாம் அலி
மதுரை:
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் அலி பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும், இஸ்கான்கிருஷ்ணர் கோவிலையும் குண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
அவன் சுட்டுக் கொல்லப்பட்ட வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வரைபடங்கள், டைரிகளில் இருந்து இந்த விவரம்தெரியவந்தது என தமிழக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பெங்களூர் விமான நிலைய சாலையில் இந்திரா நகரில் தான் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) செயற்கைக்கோள் தயாரிப்பு மையம் உள்ளது. மேலும் பல விண்வெளி ஆராய்ச்சிகளும் இங்கு நடந்து வருகின்றன.
இந்த இஸ்ரோ மையத்தின் வரைபடம் இமாம் அலி கொல்லப்பட்ட வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதே போல பெங்களூர் மகாலட்சுமி லே-அவுட்டில் ஹரே கிருஷ்ணா அமைப்பு கட்டியுள்ள உலகப் புகழ்பெற்ற இஸ்கான்கிருஷ்ணர் கோவிலின் வரைபடமும் அந்த வீட்டில் இருந்தது.
இதனால் இந்த இரு இடங்களையும் இமாம் அலி தாக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
மேலும் அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட இமாம் அலியின் டைரியில் இருந்தும் செல்போன்களில் இருந்தும் தமிழக தோல்தொழிற்சாலை உள்பட 15 பேரின் விவரங்கள் சிக்கியுள்ளன. அவர்களை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டனர்.விரைவில் இவர்களில் சிலர் கைதாகலாம்.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications