காவிரி கண்காணிப்பு குழுவிடம் முறையிட்ட மதிமுக தலைவர்
தஞ்சாவூர்:
இங்கிலாந்துகாரர்கள் ஆட்சியின்போது கூட விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன. ஆனால் சுதந்திரஇந்தியாவில் எங்களுக்கு பாதுகாப்பில்லை. வாழ்வா, சாவா நிலையில் தமிழக விவசாயிகள் உள்ளனர் என்றுமதிமுக அவைத் தலைவர் எல். கணேசன் கூறினார்.
தஞ்சாவூருக்கு வந்த காவிரி கண்காணிப்புக் குழுவிடம் பாதிக்கப்பட்ட விவசாயி என்ற முறையில் கணேசன்முறையிட்டார். பின்னர் அவர் கூறுகையில்,
காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் வாழ்வா, சாவா நிலையில் உள்ளனர். இருப்பதா, இல்லையா என்ற நிலைஉருவாகி விட்டது.
வெள்ளைக்காரன் காலத்தில் கூட இப்படிப்பட்ட நிலை வரவில்லை. எங்களை அருமையாக பாதுகாத்தார்கள்வெள்ளைக்காரர்கள். ஆனால் சுதந்திர இந்தியாவில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
வட கிழக்கு பருவ மழையை காவிரி விவசாயிகள் நம்பலாம் என்று கர்நாடகம் கூறியிருப்பதை ஏற்கவே முடியாது.வட கிழக்குப் பருவ மழையால் எங்களுக்கு பயன் ஏதும் கிடைக்காது.
கர்நாடகத்திடமிருந்து தமிழக விவசாயிகளுக்கு வர வேண்டிய உரிய நீரை உடனடிாயக திறந்து விடுவதே பலஇழப்புகளைத் தடுப்பத்கு உதவும் என்றார் கணேசன்.
காவிரிக் கண்காணிப்புக் குழு இன்று திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துவிவசாயிகளிடம் குறை கேட்கிறது.
அதன் பின்னர் சென்னை சென்று தமிழக அரசு அதிகாரிகளிடம் கண்காணிப்புக் குழுவினர் பேச்சு நடத்துவார்கள்.அதன் பிறகு டெல்லி கிளம்பிச் செல்லவுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications