தமிழக- கர்நாடக போலீசார் நாளை முக்கிய ஆலோசனை
பெங்களூர்:
இமாம் அலி உள்ளிட்ட கும்பல் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தும்விவகாரத்தில் இரு மாநில போலீசாரும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்க தமிழக காவல்துறை டி.ஜி.பி. நெயில்வால்நாளை கர்நாடகம் வருகிறார்.
கர்நாடக மாநில டி.ஜி.பி. மடியாளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். மடியாள் சமீபத்தில் தான் டி.ஜி.பியாக பதவியேற்றார்.இவர் முன்பு பெங்களூர் நகர காவல்துறை ஆணையராக இருந்தவர்.
தடை செய்யப்பட்ட அல்-உம்மா கும்பல் இப்போது அல்-முகாஜிதீன் என்ற பெயரில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.இந்த அமைப்பில் தான் இமாம் அலியும் இருந்துள்ளான். இந்த அல்-முகாஜிதீன் (முன்னாள் அல்-உம்மா) அமைப்பில் 32 பேர் மிகமுக்கிய பங்கு வகித்து வருகினறனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களில் 26 பேர் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 பேரில் 4 பேர் பெங்களூரில்சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். மீதியுள்ள 2 பேரில் ஷாஜகான் தலைமறைவாகிவிட்டான். இஸ்மாயில் என்பவன் தமிழகபோலீசாரிடம் பிடிபட்டுவிட்டான்.
இமாம் அலியின் பெங்களூர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும், பிற அல்-முஜாகிதீன் உறுப்பினர்களிடம் விசாரணைநடததியதிலும் இந்தத் தீவிரவாதிகளுக்கு பெங்களூர் மிக முக்கிய புகலிடமாக இருந்து வருவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கர்நாடக போலீசாருடன் இணைந்து செயல்படடால் தான் இவர்களது நடவடிக்கைகளை நிரந்தரமாக ஒடுக்க முடியும்என தமிழக அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகவே தமிழக டி.ஜி.பி. நெயில்வால் பெங்களூர் வருகிறார். அவர் கர்நாடக டி.ஜி.பி. மடியாள் மற்றும் உளவுப்பிரிவினருடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளார்.
பெங்களூரில் இமாம் அலியின் தங்கிருந்த வீட்டை அடையாளம் கண்ட தமிழக போலீசார் உடனடியாக வீட்டை முற்றுகையிட்டுத்தாக்க கர்நாடக போலீசாரின் உதவியை நாடியபோது ஒரு அதர்ச்சி செய்தி காத்திருந்தது.
கர்நாடகத்திடம் தீவிரவாதிகளை எதிர்கொண்டு தாக்கும் பயிற்சி பெற்ற கமாண்டோ படையே இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து தமிழகத்தில் இருந்து கமாண்டோக்களை வரவழைத்துத் தான் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் கர்நாடகம் மிகவும் தர்மசங்கடப்பட்டுப் போனது. இதையடுத்து 500 பேர் கொண்ட கமாண்டோ படையை உருவாக்கஅம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக டி.ஜி.பியின் ஆலோசனைகளை நாளைய கூட்டத்தில் கர்நாடகடி.ஜி.பி. கேட்டுப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர வழக்கம்போல வீரப்பன் விவகாரம் குறித்தும், அதிரடிப்படைகள் குறித்தும் இரு மாநில டி.ஜி.பிக்களும் விவாதிப்பர்.
கொளத்தூர் மணியை அனுப்பலாம்...
இதற்கிடையே வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க தற்போது சிறையில் இருக்கும் கொளத்தூர் மணியை தூதராகஅனுப்புவதில் எந்தத் தவறும் என கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சீனிவாஸ் பிரசாத் கூறியுள்ளார்.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications