காஷ்மீரில் தலைதூக்கியது தீவிரவாதம்: 10 பேர் பலி
ஜம்மு:
காஷ்மீரில் இன்றும் தீவிரவாதிகள் ஒரு பஸ்சை வெடிகுண்டு வைத்து தகர்த்ததில் 2 பயணிகள் கொல்லப்பட்டனர்.வேறு பல தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் நேற்று மூன்றாவது கட்டத் தேர்தல் நடந்த போது பல்வேறு இடங்களிலும் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். தேர்தலைத் தடுக்கும் விதமாக வாக்குச் சாவடிகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இந்தச் சம்பவங்களில்25 பேர் வரை கொல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த ஒரு ஜீப்பை கண்ணிவெடி மூலம்தீவிரவாதிகள் தகர்த்ததில் ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் மக்கள் தங்கள் வீட்டை வெளியே வந்து வாக்களிக்கத் தயங்கியதால் 41 சதவீத வாக்குகள் மட்டுமேபதிவாகின.
இந்நிலையில் இன்று காலை 6.25 மணிக்கு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மாண்டா அருகே சென்றுகொண்டிருந்த ஒரு பஸ்சில் ஒரு வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்தது. ஜம்மு பஸ் நிலையத்திலிருந்துகிளம்பிய பத்தாவது நிமிடத்தில் குண்டு வெடித்தது.
இதில் அந்த பஸ் உடைந்து சிதறி தீப்பிடித்துக் கொண்டது. இரண்டு பேர் தூக்கி எறியப்பட்டு அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர். பஸ் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாகஉள்ளது.
பஸ்சின் டீசல் டாங்க்கில் ஏற்கனவே பொருத்தப்பட்ட டைம்-பாம் ரக குண்டு தான் வெடித்ததாகப் போலீசார்தெரிவித்தனர்.
இதற்கிடையே புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் நகரின் அருகே இன்று காலை சுமார் 8 மணிக்குதீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் ஐந்து பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
மேலும் கூப்வாரா மாவட்டத்தில் ஹெய்ஹாமா கிராமத்தில் இரண்டு தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள்உள்ளிட்ட மூன்று பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் மூன்று கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் ஆறு சட்டசபைத் தொகுதிகளுக்கு மட்டும்தான் கடைசிக் கட்டத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலைத்தீவிரப்படுத்தியுள்ளனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications