நெய்வேலியை முற்றுகையிடுவோம், தேசிய விருதுகளை திருப்பி கொடுப்போம்: தமிழ் திரையுலகம் முடிவு
சென்னை:
நெய்வேலியில் இருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் அந்த மின் நிலையத்தைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக தமிழர் பாதுகாப்பு அணி என்ற பெயரில் புதிய அமைப்பை தமிழ்த் திரையுலகின் பல்வேறு சங்கங்களும்இணைந்து உருவாக்கியுள்ளன. இதற்கு பாரதிராஜா தலைமை வகிக்க உள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் தமிழ்த் திரையுலகம் சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகஇயக்குனர் பாரதிராஜா தலைமையில் சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் தமிழ்த் திரையுலகின் பல்வேறுசங்கங்கள், அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரைப்படஉரிமையாளர்கள் சங்கம், தொழிலாளர் யூனியனான பெப்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டன.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். விவாதத்தின் இறுதியில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
- காவிரிப் பிரச்சினையில், காவிரி ஆறு தனக்குத்தான் சொந்தம் என்று கர்நாடகம் கூறுவதால் நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்குத் தான் சொந்தம். இதை வலியுறுத்தும் வகையில் 12ம் தேதி நெய்வேலியில் மிகப் பெரிய பேரணி நடத்தி பின்னர் அனல் மின்நிலையத்தை முற்றுகையிட்டு கர்நாடகத்திற்கு மின்சாரம வழங்கக் கூடாது என்று போராட்டம் நடத்துவோம்.
- மத்திய அரசின் ஒருதலைப்பட்டசமான போக்கைக் கண்டித்தும், கர்நாடகத்தைக் கண்டித்தும் தமிழக சினிமா கலைஞர்களுக்கு மத்திய அரசு இதுவரை வழங்கிய அனைத்து தேசிய விருதுகளையும் திருப்பித் தருவும் தயார் (இத் தீர்மானம் பின்னர் காவிரிப் பிரச்சனையில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்காத வரை எந்த தமிழக நடிகர், நடிகைகள், டெக்னிசியன்கள் ஏற்கக் கூடாது என்று மாற்றப்பட்டது)
- சென்னையில் இருந்து நடை பயணம் துவங்கி நெய்வேலியில் போராட்டம் நடக்கும் வரை தமிழ்த் திரையுலகினர் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும். வாகனங்களில் கருப்புக் கொடிகளை கட்டிக் கொள்ள வேண்டும்.
- நெய்வேலி முற்றுகைப் போராட்டம் நடக்கும் தினத்தன்று தமிழ்த் திரையுலகம் தனது பணிகளை முழுவதுமாக நிறுத்தும்.
- தமிழ்ப் படங்களுக்கு இனிமேல் தமிழ்ப் பெயர்கள் தான் சூட்ட வேண்டும். மீறி ஆங்கிலப் பெயர்களில் படங்கள் எடுக்கப்பட்டால், அதைத் திரையிடவும், தயாரிக்கவும், வினியோகம் செய்யவும் தடை விதிக்கப்படும். அதில் நடிக்கும் கலைஞர்களுக்கும் தடை விதிக்கப்படும். தமிழ் பெயர் இல்லாத படங்களை வாங்க மாட்டோம் என வினியோகஸ்தர்கள் சங்கமும், அதைத் திரையிடமாட்டோம் என திரைப்பட உரிமையாளர்கள் சங்கமும் இன்றைய கூட்டத்தில் ஒப்புக் கொண்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதில் திரையுலகின் அனைத்துப் பிரிவினரும் கலந்து கொண்டாக வேண்டும்.
போராட்டங்கள் குறித்தும் மீண்டும் கூடி விரிவாகப் பேசுவது என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications