போனஸ்: கட்சிகளின் ஆதரவை நாடும் அரசு ஊழியர்கள்
சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் 23ம் தேதி முதல் நடத்தவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களும், பள்ளி ஆசிரியர்களும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் 23ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் எதிரொலியாகவே இந்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சந்திப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூட்டுப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே தொழிற்சங்க முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் வரும் 23ம் தேதி முதல் தங்கள்கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
போக்குவரத்துக்கழகம், மின் வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். தொ.மு.ச. பேரவையின் தலைவரான குப்புசாமி இதை இன்றுசென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் 23ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications