ரஜினிக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரஜினி காந்த்தைக் கண்டித்து பெரும் போராட்டம் நடத்துவோம் என்று அவரது ரசிகர்களேகூறியுள்ளனர்.

கர்நாடகத்துக்கு ஆதரவாக அறிக்கை விட்ட ரஜினியைக் கண்டித்து சென்னையில் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இதனால்அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நந்தனம் அருகே கூடிய நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் அண்ணா சாலையின் குறுக்கே நின்று ரஜினிக்கு எதிராக கோஷம்எழுப்பினர். ரஜினியே கர்நாடகத்துக்குத் திரும்பி போ என அவர்கள் கோஷமிட்டனர்.

ரஜினி நன்றி மறந்துவிட்டதாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. உடனே விரைந்து வந்த நந்தனம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்திகலைந்து போகச் செய்தனர்.

ரஜினி கொடும்பாவி எரிப்பு:

அதே போல சைதாப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாணவர் அணியினரும் ரஜினிக்கு எதிராக போராட்டம்நடத்தினர். ரஜினியின் கொடும்பாவியையும் அவர்கள் எரித்தனர்.

கன்னடத்து ரஜினியே கர்நாடகத்திற்கு திரும்பிப் போ என்று அவர்கள் கோஷமிட்டனர். கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும்ரஜினி காந்த் கர்நிாடகத்திற்குத் திரும்பிப் போக வேண்டும், அங்கு போய் கன்னடப் படங்களில் நடிக்கட்டும் என்று அவர்கள் ஆவேசமாககூறினர்.

ரஜினி ரசிகர்களும் போராட்டம்:

இதற்கிடையே ரஜினி ரசிகர் மன்றத்தினர் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, நெய்வேலி போராட்டம் சரியானதுதான். அதில் எங்களது தலைவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்.அப்படி கலந்து கொள்ளாவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம், உண்ணாவிரதம் ஆகிய போராட்டங்களில் ஈடுபடுவோம்.

ரஜினிகாந்த்தைக் கண்டித்தும் பெரும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+