சென்னை-சேலம் இடையே கிடந்த டெட்டனேட்டர்: பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
சேலம்:
சென்னைக்கும் சேலத்திற்கும் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர் குண்டு ஒன்று கிடப்பதாகஅடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்ததைத் தொடர்ந்து பெரும் ரயில் விபத்து ஒன்றுதவிர்க்கப்பட்டது.
சென்னை-சேலம் ரயில் பாதையில் தினமும் ஏராளமான ரயில்கள் செல்கின்றன. முக்கியமாக அந்த வழியாககேரளாவுக்குப் பல ரயில்கள் இரவில் செல்கின்றன.
இந்நிலையில் சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர் வெடிகுண்டுஒன்று வைக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில் நிலையத்திற்கு போன் மூலம் ஒரு தகவல் வந்தது. ஆனால் போனில்பேசியவர், தான் யார் என்பதைக் கூற மறுத்து விட்டார்.
இதையடுத்து சென்னை பகுதியிலிருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த பல ரயில்களும் ஆங்காங்கே உள்ளரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
மேலும் சேலம் மாநகரப் போலீசாருக்கும் உடனடியாகத் தகவல் தரப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களுடன்விரைந்து கருப்பூர் சென்ற போலீசார், தண்டவாளத்தில் ஒரு "எலெக்ட்ரானிக் டெட்டனேட்டர்"பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாகச் செயல்பட்டு அந்த டெட்டனேட்டரை எடுத்து செயலிழக்கச் செய்தனர்.
உரிய நேரத்தில் அந்த டெட்டனேட்டர் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால் அந்த வழியாகச் செல்லும் ஏதாவதுஒரு ரயிலை இந்த டெட்டனேட்டர் வெடித்துத் தகர்த்திருக்கும். நூற்றுக்கணக்கான பயணிகளும்பலியாகியிருப்பார்கள்.
இந்த டெட்டனேட்டர் குண்டை யார் வைத்திருப்பார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை-சேலம் இடையே சுமார் மூன்று மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பல ரயில்கள் தாமதமாகச் சென்றன. டெட்டனேட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே அப்பகுதியில் ரயில்போக்குவரத்து சீரானது.
இதற்கிடையே கொல்லத்திலிருந்து கோயம்புத்தூர் வந்த ஒரு பாசஞ்சர் ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று காலைகோயம்புத்தூர் சிட்டி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டன. ஆனாலும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications