நடிகர்களை "பொடா"வில் "உள்ளே" தள்ளணும்: சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஷ்மீர் போன்ற சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்க நினைக்கும் வகையில் நாட்டு நலன்களுக்கு எதிராகநெய்வேலியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள தமிழ் திரையுலகினரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,

சில விடுதலைப்புலி ஆதரவாளர்கள் தான் இந்தப் போராட்டத்தை நடத்த முனைந்து வருகின்றனர்.

காஷ்மீர் போல தமிழகத்தையும் தனி நாடாக்க முயற்சிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இவர்கள்முயற்சிக்கின்றனர்.

எனவே தமிழ் திரையுலகினர் நடத்தவுள்ள இந்தப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது.

அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து "உள்ளே" தள்ள வேண்டும்.

கடந்த 1972லிருந்தே காவிரியைக் கையில் வைத்துக் கொண்டு திமுகவும் அதிமுகவும் மாறி மாறி அரசியல்விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண ஒருவரும்முயற்சிக்கவில்லை.

நான் ஏற்கனவே கூறியது போல, கர்நாடக அரசிடம் திரும்பத் திரும்ப கெஞ்சிக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு,கடல் நீரைச் சுத்தப்படுத்தி பாசன நீராகப் பயன்படுத்தும் முயற்சியைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இதுதற்காலிகத் தீர்வு தான்.

நீண்டகால, நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் தென் இந்தியாவில் உள்ள மகாநதி முதல் வைகை வரைஉள்ள நூற்றுக்கணக்கான நதிகளையும் இணைக்க வேண்டும்.

இப்போதைக்கு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை உடனடியாக அளிக்கப்பட வேண்டும்என்பது தான் உடனடித் தீர்வாகும் என்று கூறியுள்ளார் சுவாமி.

இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசுஉடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்திஇன்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+