பெங்களூரில் தமிழ் படங்கள் ரத்து: கன்னட படங்களுடன் காலியாக கிடக்கும் தியேட்டர்கள்
பெங்களூர்:
பெங்களூரில் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தமிழ் படங்கள் தூக்கப்பட்டுவிட்டன. கர்நாடகத்தின் மற்ற பகுதிகளில் எங்கும் தமிழ் படம் ஓடவில்லை.
இன்று முதல் பெங்களூரில் தியேட்டர்களில் தமிழ் படங்கள் ஓடுவதை எதிர்த்து தமிழ் பந்த் நடத்துவோம் என கன்னட வெறியறான வாட்டாள்நாகராஜ் அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே நேற்று முன் தினத்தில் இருந்த தமிழ் படங்கள் தூக்கப்பட்டுவிட்டன.இதற்குக் காரணம் பெங்களூர் போலீஸ் தான்.
காவல்துறை ஆணையர் சங்கிலியானா அனைத்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ் படங்களைத்திரையிட வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். தமிழுக்கு எதிராக போராட்டம் நடத்தும் ரெளடிகளிடம் இருந்துதியேட்டர்களுக்கு பாதுகாப்பு தர லாயக்கில்லாத காவல்துறை தமிழ் படங்களையே திரையிட வேண்டாம் என்று உத்தரவுபோட்டுள்ளது. இது காவல்துறைக்கே கேவலமான விஷயம்.
இதையடுத்து பல தியேட்டர்களில் கன்னட படங்கள் திரையிடப்பட்டு காலி அரங்குகளுடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். இதே நிலைஒரு மாதம் தொடர்ந்தால் பல தியேட்டர்களை மூட வேண்டிய நிலை வரும் என உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதி ஒருவர்தெரிவித்தார்.
பெங்களூரில் கன்னட படங்களை யாரும் பார்ப்பது இல்லை. இதற்குக் காரணம் அந்தப் படங்களின் தரம் தான்.
சிவராஜ்குமார், பாட்டீல், திரில்லர் மஞ்சு, ஜக்கேஷ் என்று வெளியுலகில் கொஞ்சம் கூட அறியப்படாதவர்கள் தான் கர்நாடகத்தில்பெரிய ஹீரோக்கள். கதைகளை தமிழ் மற்றும் தெலுங்கில் இருந்து சுட்டு படம் எடுப்பவர்கள். இவர்களது படங்களைபெங்களூரில் சீண்டக் கூட ஆள் கிடையாது.
ஆனால், ராஜ்குமார் ரசிகர்களின் மிரட்டல் காரணமாக அவரது மகன்களின் படங்களை சில தியேட்டர்கள் திரையிட்டு ஓட்டுவதுஉண்டு. மற்றபடி தமிழ் படங்களையும் இந்திப் படங்களையும் நம்பித்தான் பெங்களூர் தியேட்டர்கள் இயங்கி வருகின்றன.
எம்.ஜி. ரோட்டில் உள்ள தியேட்டர்கள் ஆங்கிலப் படங்களை மட்டுமே திரையிடுகின்றன. மற்றபடி பெங்களூர் பஸ்ஸ்டான்ட்அருகே உள்ள பகுதி தியேட்டர்களில் தான் கன்னடப் படங்கள் ஓட்டப்படுகின்றன. கர்நாடகத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில்இருந்து வரும் மக்களை நம்பி இந்த தியேட்டர்களில் கன்னட படங்கள் ஓடுகின்றன.
மற்றபடி நல்ல தியேட்டர்கள் இயங்குவது தமிழ், இந்தி படங்களை நம்பித்தான். இந்திப் படங்கள் கூட இப்போதெல்லாம்தொடர்ந்து காலை வாரி வருவதால் தமிழை நம்பியே தியேட்டர்கள் இயங்குகின்றன.
தமிழ் சினிமாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீடியோ கடைகளில் தமிழ் வி.சி.டிக்கள் விற்பனை அமோகமாக உள்ளது.
வாட்டாள் மற்றும் கன்னட வெறியர்களின் மிரட்டலால் தமிழ் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் கர்நாடகத்தில் சன், ஜெயா, சன் நியூஸ், கே.டி.வி, விஜய், ராஜ், ராஜ் டிஜிட்டல் பிளஸ் என தமிழ் சேனல்கள்அனைத்தும் 3வது நாளாக இன்றும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
தமிழ் படங்களும் இல்லாமல், தமிழ் சேனல்களும் இல்லாமல் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு குறித்தசெய்திகள் மக்களை அடைந்துவிடாமல் தடுப்பதில் கர்நாடக அரசும் இந்த கன்னட வெறியர்களுக்கு முழு உதவி செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications