கேசட் அனுப்பினான் வீரப்பன்: கொளத்தூர் மணியை காட்டுக்கு அனுப்ப சொல்கிறான்
மைசூர்:
பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணியை அடுத்த8 நாட்களுக்குள் விடுதலை செய்து தன்னிடம் தூதராக அனுப்ப வேண்டும் என்று தற்போது அனுப்பியுள்ளகேசட்டில் வீரப்பன் கோரிக்கை விடுத்துள்ளான்.
காமகெரேயில் உள்ள நாகப்பா வீட்டின் அருகே நேற்று இரவு சுமார் 7 மணிக்கு இந்தக் கேசட்வைக்கப்பட்டிருந்ததை அவருடைய டிரைவர் பார்த்து, அதை நாகப்பாவின் குடும்பத்தினரிடம் சேர்த்தார்.
அந்தக் கேசட்டுடன் ஒரு சிறிய கடிதமும் வைக்கப்பட்டிருந்தது. தமிழிலும், கன்னடத்திலும் எழுதப்பட்டிருந்தஅந்தக் கடிதத்தில், இந்தக் கேசட்டை போலீசாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாஅல்லது உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கேயிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்றும்எழுதப்பட்டிருந்தது.
நாகப்பாவின் மகன் ப்ரீதம் அந்தக் கேசட்டை எடுத்துக் கொண்டு உடனடியாக பெங்களூர் சென்று கார்கேயிடம்அதை ஒப்படைத்தார்.
அடுத்த எட்டு நாட்களுக்குள் கொளத்தூர் மணியை விடுதலை செய்து தன்னிடம் தூதராக அனுப்ப வேண்டும்என்று அந்தக் கேசட்டில் வீரப்பன் கூறியுள்ளதாக, கேசட்டைப் போட்டுக் கேட்ட பின்னர் நிருபர்களிடம் கார்கேகூறினார்.
தற்போது பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் கார்கே தெரிவித்தார்.
இந்தக் கேசட்டில் நாகப்பாவும் பேசியுள்ளதாகத் தெரிவித்த அவருடைய மருமகன் டாக்டர் கிரன் பட்டேல்,நாகப்பாவின் குரல் மிகவும் உடைந்து போயிருந்ததாகவும் அவருடைய உடல் நிலை மிகவும்பாதிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் தெரிகிறது என்றும் கூறினார்.
வீரப்பனிடமிருந்து வந்துள்ள மூன்றாவது கேசட் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவனுடைய முந்தைய கேசட்டில்கொளத்தூர் மணி அல்லது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரில் யாராவது ஒருவரைதூதராக அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் கூறியிருந்தான்.
ஆனால் சிறையில் இருக்கும் யாரையும் தூதராக அனுப்ப கர்நாடக அரசு தயாராக இல்லை என்று கூறிவிட்டது.வேறு யாரை வேண்டுமானாலும் தூதராக அனுப்பத் தயார் என்றும் அந்த அரசு அறிவித்திருந்தது.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணி மற்றும் சுகுமாறன் ஆகியோர் தூது செல்ல முன் வந்தனர்.அதற்காக அவர்கள் பல நிபந்தனைகளையும் விதித்தனர். இதுகுறித்து கர்நாடக அரசு இதுவரை ஒன்றும்தெரிவிக்கவில்லை. அதனால் வீரப்பனிடம் யார் தூது செல்வது என்று இன்னும் முடிவாகவில்லை.
இதற்கிடையே வீரப்பனிடம் யாரையும் தூதராக அனுப்பப் போவதில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாஏற்கனவே அறிவித்துள்ளார். வீரப்பன் வேட்டை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வந்துள்ள மூன்றாவது கேசட்டில் கொளத்தூர் மணியை ஒரு வாரத்திற்குள் விடுவிக்கவேண்டும் என்று வீரப்பன் கெடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பாவின் குடும்பத்தினர் வீரப்பனுக்கு ஏராளமான பணத்தை ரகசியமாகக் கொடுத்துள்ளனர் என்றும்இதையடுத்து அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என்றும் கடந்த வார இறுதியில் தகவல்கள் வெளியாகின.ஆனால் நாகப்பாவின் குடும்பத்தினர் இந்தச் செய்தியை மறுத்து விட்டனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அமைதியாக இருந்த வீரப்பனிடமிருந்து மற்றொரு கேசட் வந்திருப்பதுகுறிப்பிடத்தக்கது. நாகப்பா கடத்தப்பட்டு 43 நாட்கள் ஆகிவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications