நாளைகாவிரி பந்த்: தமிழகம் ஸ்தம்பிக்கும்
சென்னை:
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தையும், மத்திய அரசையும் கண்டித்து அனைத்துக் கட்சியினரும் நாளை நடத்தும்பந்தினால் தமிழகமே ஸ்தம்பிக்க உள்ளது.
இந்த பந்த்தையொட்டி மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதா, டி.ஜி.பி. நெய்ல்வால் மற்றும்சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர்ஜெயலலிதா இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பால், மின்சாரம், குடிநீர்..
குடிநீர், மின்சாரம், பால் ஆகியவற்றின் வினியோகம் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அப்போதுஅதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் தொலைத் தொடர்பு ஆகிய அத்தியாவசியத் தேவைகளும்நாளைய பந்த்தின் போது பாதிக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.
மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்கள் ஆகியவையும் வழக்கம் போல் இயங்கும்.
தமிழக அரசே இந்த பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் மாநிலம் முழுவதிலுமுள்ள அரசு அலுவலகங்கள்,பள்ளி-கல்லூரிகள், மத்திய-மாநில அரசு நிறுவனங்கள் ஆகியவை நாளை மூடப்பட்டிருக்கும்.
மேலும் பல்வேறு வணிக அமைப்புகளும் சங்கங்களும் கூட இந்த பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தனியார்நிறுவனங்கள், ஹோட்டல்கள், கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
இந்த பந்த்துக்கு அரசு அழைப்பு விடுக்கவில்லை. அனைத்துக் கட்சிகள் தான் அழைப்பு விடுத்துள்ளன என்றுஇன்று வெளியிடப்பட்டுள்ள ஒரு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசே பந்த்துக்கு அழைப்பு விடுத்தால் அது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருப்பதால்தான் தமிழக அரசு தனது அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது. நாளை அரசு பஸ்கள் ஓடுமாஎன்பது குறித்தும் இந்தச் செய்திக் குறிப்பில் அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.
பஸ்கள் இயங்காது:
ஆனால், போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்படும் என்பது நிச்சயம். அரசு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது. அதேபோல ஆட்டோ, டாக்சிகளும் இயங்காது.
ரயில்கள் நிறுத்தம்:
பந்த் நடைபெறவுள்ள காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் ரயில் போக்குவரத்து முழுமையாகநிறுத்தப்படும் என்று தென்னக ரயில்வே ஏற்கனவே அறிவித்து விட்டது.
தமிழத்தில் காலை 6 மணிக்கு மேல் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுவிடும் என தென்னக ரயில்வேஅறிவித்துள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் அவை நிறுத்தப்பட்டு விடும். மாலை 6 மணிக்கு மேல் தான் மீண்டும்ரயில்கள் இயங்கும்.
இடையில் மாட்டி சிரமப்பட நேரிடலாம் என்பதால் குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் செல்லும் ரயில்களை இன்று முடிந்தவரை தவிருங்கள். அதே போல பெங்களூரில்இருந்து தூத்துக்குடி, சென்னை செல்லும் ரயில்களையும் தவிர்த்து விடுங்கள்.
இந்த ரயில்கள் சராசரியாக காலை 7 மணிக்குத் தான் அந்தந்த ஊர்களைச் சென்றடையும். ஆனால், பந்த் 6 மணிக்கேஆரம்பித்துவிடுவதால் ரயில்கள் முன்னதாகவே நின்றுவிடும்.
அதே போல காலையில் ஊர் போய் சேரும் நீண்ட தூர பஸ் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.
நாளை விமானப் போக்குவரத்தும் தடைபடும் என்று தெரிகிறது.
படப்பிடிப்புகள் ரத்து:
நாளை எந்தவிதமான சினிமா படப்பிடிப்பும் நடக்காது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைஅறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் என அனைத்துமே நாளையபந்த்திற்கு தாமாகவே முன் வந்து ஆதரவு அளித்துள்ளன.
அனைத்து தரப்பு மக்களும் நாளைய பந்த்தில் அமைதியாகக் கலந்து கொண்டு அதை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்ற ஜெயலலிதா இன்று தனியாக அதிமுக சார்பில் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இந்த பந்துக்கு திமுக தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ம.கவும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு தீவிரம்:
இந்த பந்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்குபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியிலும் பந்த்:
பாண்டிச்சேரியில் அனைத்துக் கட்சிகளும் நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதனால் அங்கும்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications