2வது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது தமிழகம்: கர்நாடகம் நஷ்ட ஈடு தர கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரியில் நீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு இன்று மீண்டும் ஒரு அவமதிப்பு வழக்கைஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில், காவிரியில் நீர் விடாததால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய கர்நாடகம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரியுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கடந்த மாதம் 3ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் கூடிய காவிரி நதி நீர் ஆணையம் தமிழகத்திற்கு தினமும் 0.8 டி.எம்.சி. நீரைத்திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் கர்நாடக அரசு இந்த இரண்டு உத்தரவுகளையுமே மதிக்கத் தவறி விட்டது.

முதல் வழக்கு:

இதையடுத்து கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு ஒன்றைத்தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர்பாட்டீல், தலைமைச் செயலாளர் ரவீந்திரா, நீர்ப்பாசனத்துறை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸ்களுக்கு கிருஷ்ணா உள்ளிட்ட ஐந்து பேரும் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுக்களைத் தாக்கல்செய்தனர். அதில், காவிரி விவகாரம் குறித்து ஆணையம் விசாரித்து வருவதால் இதில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

மீண்டும் மீறிய கர்நாடகம்:

இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 0.8 டி.எம்.சி. (9,000 கன அடி) நீரைத் திறந்து விட வேண்டும்என்று கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவையும் கர்நாடக அரசு மீறியது. தமிழகத்திற்கு கர்நாடகஅணைகளிலிருந்து நீர் திறந்து விடவே முடியாது என்று கிருஷ்ணா உறுதியாக அறிவித்து விட்டார்.

இன்று மீண்டும் வழக்கு:

இதையடுத்து, கர்நாடக அரசுக்கு எதிராக இன்று மீண்டும் ஒரு அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு தொடர்ந்துள்ளது.

இந்த மனுவில் தமிழகம் கூறியிருப்பதாவது:

நீர் விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முதல்வர் கிருஷ்ணா, அமைச்சர் பாட்டீல், மற்றும் மூத்தஅதிகாரிகளும் 2 முறை திட்டமிட்டே அவமதித்துவிட்டனர். இதனால் அவர்களை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும்.

கர்நாடகத்தின் இந்தச் செயலால் தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்பயிர் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகிவிட்டனர். இருக்கும் பயிர்களும் வாடிவிட்டன. இதனால் அவர்களுக்குகர்நாடகம் நஷ்ட ஈடு தர வேண்டும்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. இதில் மத்திய அரசு தலையிடவேண்டும். அரசியல் சட்டத்தின் 256வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்ற உத்தரவை அமலாக்குமாறு கர்நாடகத்துக்குமத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்காத வரை கர்நாடகம் தாக்கல் செய்யும் எந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் ஏற்கக்கூடாது.

இவ்வாறு தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நூறு அவமதிப்பு வழக்குகள் போட்டாலும் சந்திப்போம் என கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கெளடா நேற்று உச்சநீதிமன்றத்துக்கே சவால் விட்டது குறிப்பிடத்தக்கது. அதையே தான் கர்நாடக முதல்வரும் கூறி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+