காஷ்மீரில் தேர்தல் முடிந்தது: பாக். ஏவுகணை சோதனை
காஷ்மீர்:
காஷ்மீரில் இன்று இறுதிக் கட்டத் தேர்தல் சில வன்முறைச் சம்பவங்களுடன் முடிவடைந்தது. இங்கு 4 கட்டமாகதேர்தல் நடத்தப்பட்டது.
இன்று நடந்த இறுதிக் கட்டத் தேர்தலில் சுமார் 52 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கிடையே காஷ்மீர்தேர்தல்களை சீர்குலைக்க பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தான் இன்று உச்சமாக ஒருஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தான் ஒரு சோதனையை பாகிஸ்தான்நடத்தியிருந்தது.
தோடா மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கியது.
காஷ்மீரிலேயே இங்கு தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் என்பதால் தோடா மாவட்டத்தில் வரலாறுகாணாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 18,000 பாதுகாப்புப் படையினர்குவிக்கப்பட்டிருந்தனர்.
தோடா நகரிலும் ஏராளமான மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில்வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தோடா நகரில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு போலீஸ்சீருடையில் வந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன், கையோடு கொண்டு வந்திருந்த ஒரு கிரனைட் குண்டைவாக்குச் சாவடிக்குள் வீசி எறிந்தான்.
பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசாரை நோக்கி இரண்டு தீவிரவாதிகளும்சராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இந்தத் தாக்குதலால் சிறிது தடுமாறிய போலீசார் உடனடியாகப் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் வரை துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ்காரரும், ஒரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். குண்டுக் காயமடைந்தநான்கு போலீசாரில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மற்றொரு தீவிரவாதி தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அங்கிருந்து தப்பியோடி விட்டான். இந்த இரண்டுதீவிரவாதிகளும் பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் என்றுதெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் அந்த வாக்குச் சாவடியில் சிறிது நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது. பின்னர் காலை 9 மணிக்குமேல் மீண்டும் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
இதேபோல் பனிஹால் பகுதியிலும் வாக்குச் சாவடிகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல்நடத்தினர்.
ஆனால் தோடா மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் தேர்தல் மிகவும் அமைதியாக நடந்தது. வாக்களிப்பதற்காகவரிசையில் நின்று கொண்டிருந்த மக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாலை 4 மணிக்கு மேலும் அவர்கள்வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தோடா நகரில் இன்று காலையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலைத் தவிர மொத்தத்தில் இன்றைய இறுதிக் கட்டத்தேர்தல் அமைதியாகவே முடிவடைந்தது. இன்றைய தேர்தலில் மட்டும் சுமார் 52 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளன.
முதற்கட்டத் தேர்தலில் 47 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்டத் தேர்தலில் 42 சதவீத வாக்குகளும், மூன்றாவதுகட்டத் தேர்தலில் 41 சதவீத வாக்குகளும் பதிவாகின.
கடைசிக் கட்டத் தேர்தலும் பெரும்பாலும் அமைதியாக முடிவடைந்து விட்டதால் பாகிஸ்தான் தீவிரவாதிகள்ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்படுவதால், காஷ்மீர் முழுவதும் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹூரியத் மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகள் தேர்தலை எதிர்க்கும் விதமாகஇன்று காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் ஸ்ரீநகர் உள்ளிட்டபெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கையும் முழுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குப்வாரா மாவட்டத்தில் இந்தியாவுக்கு ஊடுருவ முயன்ற 12 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப்படையினர் தாக்கினர். இதில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்ற தீவிரவாதிகள் மீண்டும்பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பி ஓடிவிட்டனர்.
பாக். ஏவுகணை சோதனை:
இதற்கிடையே பாகிஸ்தான் இன்று மீண்டும் "ஷஹீன்" என்று அழைக்கப்படும் "ஹத்ப்-4" ரக ஏவுகணையைபரிசோதித்துப் பார்த்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தான் இதே ரக ஏவுகணையைப் பாகிஸ்தான் சோதனை செய்தது. இதற்குப் பதிலடியாகஇந்தியாவும் "ஆகாஷ்" ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தி சோதித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் இன்று மீண்டும் "ஷஹீன்" ஏவுகணையைச் சோதனை செய்துள்ளது.
எல்லையில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை அனுப்பி காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் இந்நிலையில் மீண்டும் ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளதால் எல்லையில் பதற்றம்அதிகரித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானிலும் நாளை பொதுத் தேர்தல்கள் நடக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக லண்டனில் வெளியாகும் "இன்டிபென்டென்ட்" பத்திரிக்கைக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய்அளித்துள்ள ஒரு பேட்டியில், "பாகிஸ்தானில் தேர்தல் என்ற பெயரில் கேலிக்கூத்து தான் நடந்து வருகிறது.அப்படிப்பட்ட ஒரு தேர்தலை "தலைக்கனம்" மிகுந்த ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் நடத்துகிறார்.ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை" என்றார்.
-->
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications