For Daily Alerts
Just In
சினிமாவில் ஆபாசம்: பாமக மகளிர் போராட்டம்
சென்னை:
தமிழ் சினிமாக்களில் ஆபாசமாக காட்சிகள் அமைப்பதையும், ஆடைகள் குறைப்பையும் கண்டித்து பாட்டாளிமக்கள் கட்சி சார்பில் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ் சினிமாக்களில் ஆபாசம் அதிகரித்த விட்டதாகவும், அரை குறை ஆடைகளுடன் நடிப்பதும், ஆடுவதும்அதிகரித்து விட்டதாகவும் பாமக மகளிர் அணியினர் கூறினர்.
இதைக் கண்டித்தும், இதுபோன்ற காட்சிகளை படத்தில் காட்ட வேண்டாம் என்று வலியுறுத்தி பாமக மகளிர் அணிசார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகளிர் அணி துணைத் தலைவி சத்ய கமலாம்பாள் இதைத் தொடங்கி வைத்தார். பாமக தலைவர் ஜி.கே. மணிஉள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Comments
Story first published: Tuesday, October 8, 2002, 5:30 [IST]