வைகோ சிறைக் காவல் வரும் 28 வரை நீட்டிப்பு
சென்னை:
பொடா வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்நீதிமன்றக் காவல் வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கடந்த ஜூலை 11ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்துவைகோ கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மூன்று முறை அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 4ம் தேதி பொடா சிறப்புநீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருடைய காவலை மேலும் ஐந்து நாட்களுக்குநீட்டித்தார் நீதிபதி ராஜேந்திரன்.
பொடா சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரணையின்றி தொடர்ந்து 90 நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க முடியும்.வைகோவின் சிறைவாசமும் எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் இன்றுடன் 90 நாட்கள் முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் இன்று காலை சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வைகோஆஜர்படுத்தப்பட்டார்.
எந்தவிதமான விசாரணையும் இன்றி தொடர்ந்து 90 நாட்கள் தன்னை சிறைக் காவலில் வைத்து விட்டதால்,தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி வைகோ இன்று பொடா நீதிமன்றத்தில் வாதாடினார்.
ஆனால் இந்த வாதங்களை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி ராஜேந்திரன், வரும் 28ம் தேதி வைகோவின் நீதிமன்றக்காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து வைகோ மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications