Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகப்பா கடத்தல்: எதுவும் நடக்கலாம்- கிருஷ்ணா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பனிடம் கொளத்தூர் மணியைத் தூதராக அனுப்பலாமா என்பது குறித்து சட்ட நிபுணர்களிடம் கலந்துஅலோசித்து வருவதாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பன் சமீபத்தில் அவருடையகுடும்பத்தினருக்கு மூன்றாவது கேசட்டை அனுப்பியிருந்தான்.

பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிடர் இயக்கத் தலைவரான கொளத்தூர் மணி மற்றும்கொள்ளேகால் பகுதி ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னாச்சி மகாதேவசாமி ஆகியோரைத் தன்னிடம்தூதர்களாக அனுப்ப வேண்டும் என்று அந்தக் கேசட்டில் வீரப்பன் கோரிக்கை விடுத்திருந்தான்.

கொளத்தூர் மணிக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தால் அவரைத் தூதராக அனுப்புவது குறித்து கர்நாடக அரசுஆட்சேபம் தெரிவிக்காது என்று கூறிய அம்மாநில சட்டத்துறை அமைச்சர் சந்திரேகெளடா, தூதராகச் செல்வதற்குமகாதேவசாமியும் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில் கர்நாடகாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள கிருஷ்ணா இன்று நிருபர்களிடம் பேசுகையில்,

வீரப்பனிடம் கொளத்தூர் மணியைத் தூதராக அனுப்புவது குறித்து சட்டரீதியிலான நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளோம்.

அவரைத் தூதராக அனுப்ப முடியுமா என்பது குறித்து சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசித்து வருகிறோம்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரைத் தூதராக அனுப்புவது எவ்வளவு சிரமம் என்பது வீரப்பனுக்கும்நன்றாகத் தெரியும்.

கடந்த முறை நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது கூட இதுபோன்ற சில சிக்கல்களை கர்நாடக அரசு சந்தித்ததுவீரப்பனுக்கு இன்னும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த விஷயத்தில் நீதிமன்றம் என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அதே நேரத்தில் நாகப்பாவைத் தேடி அவருடைய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட சில பொதுமக்களேகாட்டுக்குள் புகுந்திருப்பதாகத் தெரிகிறது.

யாருக்குத் தெரியும்? நாகப்பா கடத்தல் விவகாரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருமே எதிர்பாராதவிதமாக அவரே தப்பித்து வந்தாலும் வரலாம் என்றார் கிருஷ்ணா.

"ராஜ்குமார் விடுதலைக்குப் பின்னர் வீரப்பனைப் பிடிப்பதற்காக எவ்வளவோ முயற்சித்தோம். அதன் பின்னர்உருவான ஜெயலலிதா தலைமையிலான புதிய தமிழக அரசுடனும் நன்றாகவே ஒத்துழைத்தோம். ஆனால் இன்னும்ஒன்றும் நடக்கவில்லை" என்றும் கிருஷ்ணா கூறினார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+