ரஜினியுடன் "கன்னட" நடிகர்களும் உண்ணாவிரதம்?
சென்னை:
தனியாக உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துடன் அர்ஜூன், பிரபுதேவா உள்ளிட்ட சிலகன்னட நடிகர்களும் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று தெரிகிறது.
ரஜினியுடன் உண்ணாவிரதம் இருக்க தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் கன்னட நடிகர்கள் சிலர் தயாராகஇருப்பதாகத் தெரிகிறது. அர்ஜூன், பிரபுதேவா, நாகேஷ் (இவரும் கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவரே)உள்ளிட்டோர் ரஜினியுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க விருப்பம் தெரிவித்து அவருடன்பேசியுள்ளார்களாம்.
மேலும் ரஜினி நடத்தும் போராட்டத்தில் இயக்குநர் பாலச்சந்தரும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று இவர்கள்வலியுறுத்தியுள்ளார்களாம்.
ஆனால் மற்றொரு முன்னணி கன்னட நடிகரான பிரகாஷ் ராஜ் இதுவரை எந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப்போகிறார் என்பது முழுமையாகத் தெரியவில்லை. முரளியின் கருத்தும் தெரியவில்லை. ஆனால், பிரகாஷ்ராஜுக்கும் ரஜினிக்கும் எப்போதும் ஒத்து வந்தது இல்லை.
நடிகர் சங்கத்தில் நடைபெறும் கூட்டங்களில் அர்ஜூனும், முரளியும் தவறாமல் கலந்து கொள்கிறார்கள். ஆனால்பிரகாஷ் ராஜைப் பார்க்க முடிவதில்லை.
மேலும் ரஜினி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி கொடுப்பாரா என்பதிலும் பெரும்சந்தேகம் நிலவுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு போராட்டங்கள் நடந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் என்ற காரணத்தைக் காட்டிரஜினி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ரஜினிக்கு ஆதரவும் எதிர்ப்பும்:
காங் தலைவர் சோ.பா, இளங்கோவன்: ரஜினிக்கு கர்நாடகத் தொடர்பு இருக்கிறது. எனவே அவர்உண்ணாவிரதம் இருந்தால் தண்ணீர் கிடைக்கும் என்பதால் அதை நாங்கள் ஆதரிக்கிறோம். அவரதுஉண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பார்கள்.
இல.கணேசன், பா.ஜ.க.: ரஜினிகாந்த்தின் உண்ணாவிரதத்தை பா.ஜ.க. ஆதரிக்கிறது, வரவேற்கிறது. நெய்வேலிபோராட்டத்தை திரையுலகினர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
டாக்டர் கிருஷ்ணசாமி: ரஜினியுடன் புதிய தமிழகம் தொண்டர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வார்கள்.
திருமாவளவன்: உண்ணாவிரதத்தை வரவேற்கிறோம். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கலந்து கொள்வார்கள்.அதே நேரத்தில் இரு இடங்களில் போராட்டம் நடத்தி ஒற்றுமையை நடிகர்கள் குலைக்கக் கூடாது. நடிகர்கள் ஒற்றுமையைக்குலைக்க திமுகவும் அதிமுகவும் சதி செய்கின்றன. ( சில நாட்களுக்கு முன்பு வரை இவர் ரஜினியை கடுமையாகவிமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
யசோதா, காங்கிரஸ்: இது துரதிர்ஷ்டவசமான முடிவு.
வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: இது சரியல்ல. கலைஞர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டு தனித்தனியாகபோவது காவிரிப் பிரச்சினையை திசை திருப்பி விடும். நல்ல ஒற்றுமையுணர்வு ஏற்பட்டு வரும் வேளையில்ரஜினிகாந்த் தனியாக போராட்டம் நடத்துவது அந்த ஒற்றுமையை குலைத்து விடும்.
வாழப்பாடி ராமமூர்த்தி: குறுக்கு சால் ஓட்ட நினைக்கிறார்கள் கருணாநிதியும், ரஜினியும். ரஜினி தமிழகத்திற்குஒத்து வர மாட்டார், அதற்கு அவர் உகந்தவர் அல்லர் என்று ஆரம்பம் முதலே நான் கூறி வருகிறேன்.இப்போதாவது அவரது ரசிகர்களும், தமிழக மக்களும், திரையுலகத்தினரும் அவரை சரியாக உணர்ந்துகொண்டனர் என்பது சந்தோஷம் தருகிறது.
கி.வீரமணி: என் வழி தனி வழி என்று படங்களில் கூறுவது போல தனியாக உண்ணாவிரதம் இருப்பது சரியானதீர்வாகாது. திமுக நடிகர்கள் என்று கருணாநிதி பிரித்துக் கூறுவதும் சதி வேலையாகத்தான் கருத முடியுமே தவிரவேறு எப்படி எடுத்துக் கொள்வது?
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications