மதுரை உயர் நீதிமன்ற கிளை செயல்பட மேலும் தாமதமாகும்?
மதுரை:
மதுரை உலகனேரியில் அமைக்கப்பட்டு வரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் செயல்படத்தொடங்குவது மேலும் தாமதம் ஆகலாம் என்று தெரிகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கிளை அமைப்பது குறித்துபரிசீலிக்கப்பட்டது.
இதையடுத்து அதற்காக மதுரையைத் தேர்வு செய்தும் 20 வருடமாகி விட்டது. இங்கு கிளை அமைப்பதற்கானபணிகள் துவங்கியும் 10 வருடமாகிறது. ஆனால் இன்னும் பணிகள் முடிந்தபாடில்லை.
இந்தப் பணிக்கு முதலில் தமிழக அரசு ரூ.56 கோடி நிதியை ஒதுக்கியது. ஆனால் சமீபத்தில் கடுமையான நிதிநெருக்கடி காரணமாக ரூ.8 கோடியை குறைத்து விட்டது.
இதனால் தளம் அமைக்கும் பணியும், பெயின்ட்டிங் பணியும் பாதியில் நின்றன. இந்தப் பணிகள் தற்போது தான்மீண்டும் ஆரம்பித்துள்ளன. இது முடிய மேலும் மூன்று மாதங்களாகும் என்று தெரிகிறது.
முன்னதாக, வரும் டிசம்பர் மாதம் கிளையின் செயல்பாடு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்இப்போது மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications