காஷ்மீரில் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி: ஆசாத் முதல்வாராகிறார்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷமீரில் நடந்த தேர்தலில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அங்கு காங்கிரஸ்கட்சி எதிர்பாராத வெற்றி அடைந்துள்ளது.

கடந்த இரு மாதங்களாக காஷ்மீரில் 4 கட்டமாகத் தேர்தல்கள் நடந்தன. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டூழியத்தையும் மீறிஇத் தேர்தல்கள் நடந்தன. மக்களும் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்து தேர்தலை வெற்றி அடையச் செய்து உலக அளவில்பாகிஸ்தானின் தவறான பிரச்சாரத்துக்கு முடிவு கட்டினர்.

இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.அதே போல மெஹ்பூபா சயீதின் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், இருவருக்குமேயாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

இதனால் காங்கிரசும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.

காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:

மொத்தமுள்ள இடங்கள்- 87

தேர்தல் நடந்த இடங்கள்- 87

முன்னணி நிலவரம்:

காங்கிரஸ்- 23

மக்கள் ஜனநாயகக் கட்சி- 15

தேசிய மாநாட்டுக் கட்சி- 25

பா.ஜ.க.- 2

பகுஜன் சமாஜ்- 1

மற்றவை- 21

ஆட்சி அமைக்க 44 இடங்கள் வேண்டும். ஆனால், ஆளும் கட்சியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக்குக் கட்சிக்கு 25இடங்கள் தான் கிடைத்துள்ளன.

அதே போல படுதோல்வி கண்ட இன்னொரு கட்சி பா.ஜ.க. இந்துக்கள் 85 சதவீதம் வசிக்கும் ஜம்மூவில் கூட பா.ஜ.கவுக்கு பெரும்தோல்வி கிடைத்துள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவரும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவருமான குலாம் நபி ஆசாத் அடுத்த முதல்வராவதற்கு நிறையவாய்ப்புக்கள் உள்ளன. அவருக்கு மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிகிறது. அந்தக் கட்சிக்கு துணைமுதல்வர் பதவி மெஹ்பூபாவுக்குத் தரப்படலாம் என்று தெரிகிறது.

மெஹ்பூபாவின் தந்தை முப்தி முகம்மத் சயீத் முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். இதனால் மெஹ்பூபாவும் காங்கிரசில்இருந்தார். ஆனால், வி.பி.சிங் காங்கிரசில் இருந்து பிரிந்தபோது சயீத்தும் காங்கிரசில் இருந்து விலகினார். பின்னர் தனது மகள்மெஹ்பூபாவை முன்னிருத்தி மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தொடங்கினார்.

இப்போது தான் விலகி காங்கிரஸ் உடன் இணைந்தே ஆட்சியமைக்க மெஹ்பூபா திட்டமிட்டுள்ளார். வி.பி. பிரதமராகஇருந்தபோது மெஹ்பூபாவை தீவிரவாதிகள் கடத்திச் சென்றதும் நினைவிருக்கலாம்.

இத் தேர்தலில் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகனும் மத்திய அமைச்சருமான ஒமர் அப்துல்லா மற்றும் பரூக்கின் தம்பியும்படுதோல்வியடைந்தனர். இதில் வெற்றி பெற்றால் தனது மகன் ஒமரை முதல்வராக்க பரூக் திட்டமிட்டிருந்தார்.

காங்கிரசும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் சேர்ந்தாலும் கூட முழுப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.இதனால் பகுஜன் சமாஜ் போன்ற குட்டிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் காஷ்மீரில் அடுத்த ஆட்சி அமைய உள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+