இலங்கையில் போலீஸ் சுட்டு 8 தமிழர்கள் பலி
கொழும்பு:
அம்பாரை மாவட்டத்தில் போலீசார் சுட்டு 8 தமிழர்கள் உயிரிழந்தனர்.
தமிழர்கள் நிறைந்த இந்தப் பகுதியில் ராணுவ முகாம்களும் போலீஸ் முகாம்களும் இயங்கி வருவதற்கு கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது. அமைதிப் பேச்சு தொடங்கிய பின்னரும் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்படவில்லை.
நேற்று மாலை இரு எல்.டி.டி.ஈ. அரசியல் பிரிவு இயக்கத்தினரை சிறப்பு அதிரடிப்படையினர் இழுத்துச் சென்று கஞ்சன்குடாமுகாமில் வைத்து தாக்கினர். இதையடுத்து அப் பகுதி மக்கள் அங்கு திரண்டு ஆர்பாட்டம் செய்தனர். முகாமையும்முற்றுகையிட்டனர்.
ராணுவத்துக்கும் போலீசாருக்கும் எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது அவர்களுக்கும் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த முகாம்மீது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இந் நிலையில் திடீரென சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் மக்கள் மீது துப்பாக்கியால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தஆரம்பித்தனர். இதில் 8 தமிழர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.
ஆனால், இந்த மக்களை புலிகள் தான் தூண்டிவிட்டு அனுப்பியதாகவும் தங்களது ஓய்வு அறையை மக்கள் தீ வைத்துஎரித்ததையடுத்துத் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கொழுப்பில் போலீஸ் தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது.
அமைதிப் பேச்சு தொடங்கிய பின்னர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகொலைகள் நடந்துள்ளது இதுவேமுதல்முறையாகும்.
இச் சம்பவம் குறித்து உயர் மட்ட ராணுவ விசாரணைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். இது தவிர நார்வேஅமைதிக் குழுவினரும் தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச் சம்பவத்தால் வட-கிழக்குப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications