நெய்வேலி மின் நிலையத்துக்கு 24 மணி நேர பாதுகாப்பு
கடலூர்:
நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 2-வது மின் உற்பத்தி பகுதியில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அங்கு 24 மணி நேர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகம் சார்பில் வரும் 12ம் தேதி நெய்வேலியில் பேரணியும், ஆர்ப்பாட்டமும், பொதுக்கூட்டமும்நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரஜினிகாந்த்தைத் தவிர மற்ற கலைஞர்கள் இதில்கலந்து கொள்கின்றனர்.
இந் நிலையில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகம் எதிரே போராட்டம் நடத்த அனுமதிவழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டாவது மின் உற்பத்தி நிலையம் அருகில் போராட்டம் நடத்திவிட்டுத்தான் சென்னை திரும்புவோம் என்று பாரதிராஜா கூறியுள்ளார்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது யூனிட் உள்ள பகுதியைச் சுற்றிலும் மத்தியதொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முறையான அனுமதி இல்லாமல் யாரையும் உள்ளே விடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 24 மணி நேரரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்தியதொழில் பாதுகாப்புப் படையினரின் கமாண்டர் சீனிவாசன்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications