ரஜினியுடன் விஜய்காந்த் திடீர் மோதல்
சென்னை:
கடந்த இரு நாட்களாக பல்வேறு நிலைகள் எடுத்து வரும் விஜய்காந்த் இப்போது ரஜினிக்கு எதிராக கருத்துத்தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுடன் அவர் தொலைபேசியில் ஆலோசனை நடத்திய பிறகு இந்த லேட்டஸ்ட் நிலையைஅவர் எடுத்துள்ளார்.
நேற்று இரவு நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த், 40 லட்சம் கர்நாடகத் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள்,கொல்லப்படுவார்கள் என்று கன்னடர்களைத் தூண்டும் விதத்தில் பேசுகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படிப்பேசுவதை உடனடியாக அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஜயகாந்த், பாரதிராஜா தலைமையில் நடிகர்கள், நடிகையர்,இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரது ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின் நெய்வேலி போராட்டத்தில் நடிகர் சங்கம் கலந்து கொள்வதாக அதிகாரப்பூர்வமாகவிஜயகாந்த் அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நெய்வேலி போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். ஓஹோவென்று இருக்கும். மிக மிக சிறப்பாக நடந்தேறும்.
கர்நாடக மக்களை அங்குள்ள அரசியல்வாதிகள் குழப்பி வைத்திருக்கிறார்கள். காவிரி தண்ணீரைத் தரக் கூடாது.தண்ணீர் கேட்பது தப்பு, விடுவதும் தப்பு. தமிழன் என்றாலே பெரும் தப்பு என்று அவர்கள் மக்களை தவறானபாதையில் சிந்திக்க வைத்துள்ளார்கள். இதற்கு கர்நாடக மக்கள் துணை போகக் கூடாது.
தமிழ் திரையுலகினர் போராட்டம் நடத்த வேண்டியஅவசியம் இல்லை. ஆனால் கன்னடத் திரையுலகினர் நடத்தியவிதம் தான் நம்மையும் போராட்டத்தில் தள்ளத் தூண்டியுள்ளது.
அவர்களே போராட்டம் நடத்தும் போது நீங்கள் என்ன தான் செய்கிறீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்களே?அதற்கு நாங்கள் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். உணர்வுகளைக் காட்டித் தான் ஆக வேண்டும்.
போராட்டம் நடத்தாமல் எப்படி இருப்பது? எனவே நெய்வேலி போராட்டம் முழுக்க முழுக்க சரியானது தான்.
இங்கு நாம் போராடினால் கர்நாடகத்தில் உள்ள 40 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள், அடிக்கப்படுவார்கள்,கொல்லப்படுவார்கள் என்று ரஜினி பேசியிருக்கிறார்.
இது கர்நாடக மக்களை, குறிப்பாக, கன்னட வெறியர்களை அவரே தூண்டி விடுவது போல உள்ளது. முதலில்இப்படிப் பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த வார்த்தை சரியல்ல என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications