நான் நெய்வேலி போவேன்: தலை சுற்ற வைக்கிறார் சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலியில் சனிக்கிழமை நடக்கும் திரையுலக கலைஞர்கள் போராட்டத்தில் திமுக நடிகர்களான சரத்குமார்,நெப்போலியன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.

முதலில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த திமுக தலைவர் கருணாநிதி, பின்னர் இதில் திமுகநடிகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என திடீரென்று அறிவித்தார்.

இதனால் நான் நெய்வேலி போக மாட்டேன் என்று அறிக்கை விட்டார் சரத் குமார்.

இந் நிலையில் நடிகர் விஜயகாந்த், கருணாநிதியை நேற்று சந்தித்து விளக்கினார். இதையடுத்து திமுக கலைஞர்கள்பங்கேற கருணாநதி பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

இதனால் போராட்டத்தில் பங்கேற்பதாக சரத்குமார் அறிவித்துள்ளார்.

அவரும்நெப்போலியனும் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் விஜயகாந்த், எங்களது தலைவர் கலைஞரைசந்தித்து நெய்வேலி பேரணி அமைதியான வழியிலும், பெரியார், அண்ணா வழியில் அறப்போராட்டமாகஅமையும் என்றும், பாரதிராஜா கூறியது போல தடையை மீறும் போராட்டமாக இருக்காது என்றும்உறுதியளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்தப் போராட்டத்தில் நானும் மற்றும் திமுக கலைஞர்களும் கலந்து கொள்கிறோம் என்றனர்.

இதையடுத்து திமுக கலைஞர்களைப் போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததற்காக கருணாநிதிக்குவிஜயகாந்த் நன்றி தெரிவித்தார்.
அதே போல ரஜினிகாந்த் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் தாங்கள் கலந்து கொள்ளப் போவதாக திமுககலைஞர்கள் அறிவித்துள்ளனர்.

அப்பப்பப்பாா....... நெய்வேலி போராட்ட நியூஸ் என்றாலே நமக்கு இப்போதெல்லாம் குழம்பி, தலை சுற்றஆரம்பித்துவிடுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+