""நான் தனியாக தூது வரலாமா?"": வானொலி மூலம் வீரப்பனிடம் கேட்டார் மகாதேவசாமி
பெங்களூர்:
"நான் தனியாக தூது வந்தால் உங்களுக்குச் சம்மதமா?" என்று கேட்டு வீரப்பனுக்கு வானொலி மூலம் இன்றுதகவல் அனுப்பினார் கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னச்சி மகாதேவசாமி.
பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர் மணியை விடுதலைசெய்து, அவருடன் மகாதேவசாமியையும் தூது அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் கேசட் மூலம் கேட்டிருந்தான்.
ஆனால் கொளத்தூர் மணியை தூது அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால், மகாதேவசாமியை மட்டும்தூதராக காட்டுக்குள் அனுப்ப கர்நாடக அரசு முடிவு செய்தது.
இருந்தாலும் இதற்கு வீரப்பன் சம்மதிக்க வேண்டுமே என்று எண்ணிய அரசு, மகாதேவசாமியை வானொலி மூலம்அவனுக்குத் தகவல் அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன்படி இன்று காலை மகாதேவசாமி வானொலியில் (வீரப்பனிடம் பேசுவது போல்) பேசினார். அவர்பேசுகையில்,
கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைக்க கால தாமதம் ஆகலாம் என்று தெரிகிறது. மேலும் அவரைத் தூதராகஅனுப்புவதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன.
எனவே கொளத்தூர் மணி காட்டுக்குள் தூதராக வருவது என்பது மிகவும் சிரமமான விஷயம்.
அதனால் நான் மட்டும் தனியாக தூதராக வந்தால் அதில் உங்களுக்குச் சம்மதமா? இது குறித்து நீங்கள்உடனடியாகப் பதிலளித்தால் நான் எந்த நேரத்திலும் காட்டுக்குள் வரத் தயாராக உள்ளேன்.
மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் நாகப்பாவை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைத்தவுடன் அவரையும் அழைத்துக் கொண்டு நான் நிச்சயம் காட்டுக்குள்வருவேன். அப்போது உங்களுடைய நிபந்தனைகள் குறித்துப் பேசுவோம் என்று வானொலியில் பேசினார்மகாதேவசாமி.
மகாதேவசாமி வானொலி மூலம் பேசிய இந்த விவரங்களை கர்நாடக மாநில டி.ஜி.பி. மடியால் இன்று பிற்பகல்நிருபர்களிடம் தெரிவித்தார்.
மகாதேவசாமியின் வானொலிப் பேச்சைத் தொடர்ந்து வீரப்பனிடமிருந்து மீண்டும் ஒரு கேசட் விரைவில் வரும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications