நாகப்பா கடத்தல்: கிருஷ்ணாவுடன் மகாதேவசாமி சந்திப்பு
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பனிடமிருந்து மீட்பதற்காக காட்டுக்குள் தூது செல்வது குறித்துஅம்மாநில முதல்வர் கிருஷ்ணாவிடம் கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் மகாதேவசாமி பேச்சுநடத்தினார்
மகாதேவசாமியுடன் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர்மணியையும் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் நாகப்பாவைக் கொன்று விடுவேன்என்றும் வீரப்பன் தான் அனுப்பிய கேசட்டில் மிரட்டியிருந்தான்.
அவர்கள் எட்டு நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்றும் கடந்த 6ம் தேதி அனுப்பிய கேசட்டில் வீரப்பன்கூறியிருந்தான்.
கொளத்தூர் மணியைத் தூதராக அனுப்புவதில் சட்டரீதியாகப் பிரச்சனைகள் உள்ளன என்று கர்நாடக அரசுஅறிவித்துள்ளது. ஆனாலும் தூது செல்ல மகாதேவசாமி தயாராகத் தான் உள்ளார்.
இந்நிலையில் மகாதேவசாமியும் நாகப்பாவின் மகன் பிரீதம் மற்றும் மருமகன் கிரண் ஆகியோர் நேற்றுகிருஷ்ணாவின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தனர். பத்திரிக்கையாளர்களுக்கு தாங்கள் வருவது தெரியக்கூடாது என்பதால் அவருடைய வீட்டின் பின்புற வாசல் வழியாகச் சென்று கிருஷ்ணாவைச் சந்தித்துவிட்டு, பின்புறவாசல் வழியாகவே அவர்கள் வெளியேறினர்.
அதன் பின்னர் கர்நாடகப் பாதுகாப்பு ஆலோசகரான சீனிவாசலு நிருபர்களிடம் கூறுகையில்,
முதல்வருடன் பேசிய மகாதேவசாமி முதலில் கொளத்தூர் மணியுடன் தான் காட்டுக்குள் தூது செல்வேன் என்றுகூறினார்.
அதன்பின்னர் அதில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து மகாதேவசாமியிடம் எடுத்துக் கூறப்பட்டது.
அதன் பிறகே தனியாகச் சென்று வீரப்பனைச் சந்திக்க மகாதேவசாமி சம்மதம் தெரிவித்தார்.
மனிதாபிமான அடிப்படையில் நாகப்பாவை விடுதலை செய்ய வேண்டும் என்று புதன்கிழமை (இன்று) வானொலிமூலம் வீரப்பனிடம் வேண்டுகோள் விடுக்கப்படும் என்றார் சீனிவாசலு.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications