அரசு ஊழியர்களின் அகவிலை படியை "கட்" செய்யலாம்: ஜெ. யோசனை
சென்னை:
நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசு ஊழியர்களின் அகவிலைப் படியை நிறுத்தி விடலாம் என்று டெல்லியில்நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா யோசனை கூறினார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வறட்சி, பஞ்சம், வெள்ளம் ஆகியவை கோரத் தாண்டவமாடியதைத்தொடர்ந்து பல மாநிலங்களும் மத்திய அரசிடம் நிதியுதவி கேட்டன.
இதையடுத்து மாநிலங்களின் நிதி நிலைமை குறித்து விவாதிப்பதற்காக முதல்வர்களின் மாநாட்டை பிரதமர்வாஜ்பாய் இன்று டெல்லியில் கூட்டினார். இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா நேற்று மாலையேவிமானம் மூலம் டெல்லி சென்றார்.
இன்று காலையில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக நிதி நிலைமை குறித்து ஜெயலலிதா விளக்கிக் கூறினார். அவர்மேலும் பேசுகையில்,
அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் 95 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கேசரியாகிறது. ஏழைகளுக்கு 2 சதவீதம் தான் செலவழிக்கப்படுகிறது.
இப்படி ஏழை மக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட கவனிக்க முடியாமல் தற்போது ஏற்பட்டுள்ள கடும்நிதி நெருக்கடியில் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வுகளை எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதில் அரசு ஊழியர்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுடையஅகவிலைப் படியை நிறுத்துவது நிதி நெருக்கடியைப் பெருமளவிற்குக் குறைக்கும்.
அல்லது அந்த அந்த மாநிலங்களின் நிதி நிலையைப் பொறுத்து அகவிலைப் படியை அந்த மாநிலங்களே நிர்ணயம்செய்து கொள்ளலாம் என்ற புதிய கொள்கைையைக் கொண்டுவர வேண்டும்.
மேலும் மாநில அரசின் சிறுசேமிப்பு நிதியிலிருந்து 20 சதவீதத் தொகையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்என்பதில் எங்களுக்கு சம்மதமே இல்லை. இதனால் மாநிலங்கள் அதிக நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியையும் நிதி நெருக்கடியையும் சமாளிக்க ரூ.3,000 கோடி நிவாரணத் தொகையைஉடனடியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications