நலத்துறை அமைச்சர் தொகுதியில் "டெங்கு" காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி
ஓமலூர்:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியான ஓமலூர் அருகே விஷக் காய்ச்சல் காரணமாகஇதுவரை 2 பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது நாலுகால் பாலம். இங்குள்ள புதுக்காலனியில் வசித்து வரும் சுமார்200 பேர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்தக் காலனியில் கழிப்பிடம், சாக்கடை, குடிநீர், சாலை, தெரு விளக்கு போன்ற எந்தவிதமான அடிப்படைவசதியும் கிடையாது.
குடி நீர் கூட அருகிலுள்ள வேங்கானூர் அருகே போர்வெல் மூலமாக புதூரில் உள்ள மேல்நிலைத் தொட்டியில்ஏற்றப்பட்டு அங்கிருந்து குழாய் மூலமாகத் தான் வருகிறது. அந்த நீரும் அவ்வளவு சுத்தம் கிடையாது. ஒரேஉப்பாகவும் இருக்கும்.
இந்நிலையில இப்பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மனைவி செந்தாமரை (37), பெருமாயி (25)ஆகியோருக்கு திடீர் தலைவலியும், நெஞ்சு வலியும் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர்களுக்குக் கடுமையானகாய்ச்சலும் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் இருவரும் சரக்குபிள்ளைர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.அங்குள்ள டாக்டர்கள் வழக்கம் போல சாதாரண காய்ச்சலுக்கு போடும் ஊசியைப் போட்டு, மாத்திரைகளையும்கொடுத்து அனுப்பி விட்டனர்.
ஊசி போட்ட போதிலும் வீட்டுக்கு வந்த செந்தாமரைக்கும் பெருமாயிக்கும் காய்ச்சல் அதிகரித்தது. வேறுமருத்துவமனைக்குப் போகலாமா என்று யோசிப்பதற்குள்ளாகவே அவர்கள் இருவரும் கடந்த 7ம் தேதிபரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்கள் இறந்த செய்தி தெரிந்த பின்னரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஒரு நடவடிக்கையும்எடுக்கவில்லை.
இதையடுத்து அப்பகுதியில் வேறு பலருக்கும் காய்ச்சல் பரவியது. இதுவரை 25 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுஓமலூர் அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இறந்த பெண்கள் உள்பட இவர்கள் அனைவருக்குமே டெங்கு என்ற கொடிய விஷக் காய்ச்சல் தான்தாக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இரண்டு பெண்கள் இறந்ததுமே சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் அதுமேலும் பரவாமல் தடுத்திருக்கலாம். அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக மேலும் 25 பேருக்கு அந்த விஷக்காய்ச்சல் பரவி தற்போது அவர்கள் அனைவருமே கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
தற்போது புதுக்காலனியில் வசிக்கும் மற்ற மக்களுக்குத் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரான டாக்டர் பிரகாஷ் கூறினார்.
விஷக் காய்ச்சலால் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கும் இந்த ஓமலூர் தொகுதி சுகாதாரத்துறைஅமைச்சர் செம்மலையின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் புதுக்காலனிக்கு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு செம்மலையிலிருந்து பல அதிகாரிகள் வரை மனுகொடுத்தும் ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கோபத்துடன் கூறினார்கள்.
காய்ச்சல் உள்ளிட்ட பல தொற்று வியாதிகள் பரவி மேலும் பல உயிர்களைப் பலி வாங்குவதற்குள் அமைச்சர்உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications