சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரில் அனல் பறக்குமா?
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஆனாலும் பல்வேறுமுக்கியமான பிரச்சனைகள் இந்தக் கூட்டத் தொடரில் அலசப்பட உள்ளதால் அனல் பறக்கும் என்று தெரிகிறது.
ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள பல்வேறுஅவசர சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.
அதில் முக்கியமானது கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதாவாகும். சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச்சட்டத்திற்கு ஏற்கனவே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் சிறுபான்மை மதத்தினர், சட்டசபைக் கூட்டம் தொடங்குவதையொட்டிநாளையே போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டசபையில் இந்தச் சட்ட மசோதாவை அத்தனை எதிர்க் கட்சிகளும் எதிர்ப்பார்கள் என்றேதெரிகிறது. பா.ஜ.க. தவிர அநேகமாக அனைத்து எதிர்க் கட்சிகளுமே இந்தச் சட்ட மசோதாவுக்கு எதிராகஅறிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மதமாற்றத் தடைச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் போது சட்டசபையில் அனல் பறக்கும் என்றுதெரிகிறது.
இருப்பினும் ஆளுங்கட்சி தன் சொந்த பலத்திலேயே இந்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றி விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பிரச்சனையைத் தவிர காவிரிப் பிரச்சினை, அரசு ஊழியர்கள் கோரிக்கை, சாலைப் பணியாளர்கள்பிரச்சினை, விரைவில் உயர்த்தப்படவுள்ள மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பஎதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மொத்தத்தில் இந்தக் குளிர்கால சட்டசபைக் கூட்டத் தொடரில் கடுமையான அனல் பறக்கும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்த பின்னர் அக்கட்சி கலந்து கொள்ளும் முதல் சட்டசபைக்கூட்டத் தொடர் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications