சமீபத்தில் தான் லைசென்ஸ் பெற்ற தொழிற்சாலை
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே 12 பேரின் உயிர்களைப் பலி வாங்கிய பட்டாசுத் தொழிற்சாலைக்கு சமீபத்தில் தான் உரிமம்(லைசென்ஸ்) வழங்கப்பட்டது.
மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வமூர்த்தி (35) என்பவர் தான் இந்தப் பட்டாசுத் தொழிற்சாலையைநடத்தி வந்தார். அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தது.
தொழிற்சாலை என்றால் அதற்கான கட்டடம் கூட கிடையாது. வெறும் கூரை வேயப்பட்ட கொட்டகை தான் இந்தப்பட்டாசுத் தொழிற்சாலை. இந்தத் தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களில்பெரும்பாலானவர்கள் பெண்களே.
நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது தெரிந்த உடனேயே செல்வமூர்த்தி தலைமறைவாகி விட்டார். அவரைப்பிடிப்பதற்காகத் தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தொழிற்சாலை இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டு அதில் மூன்று பேர்இறந்தனர். இதையடுத்து அதன் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வெகு சமீபத்தில் தான் இந்தப் பட்டாசுத் தொழிற்சாலைக்கு மீண்டும் லைசென்ஸ் வழங்கப்பட்டது.அதற்குள்ளாகவே மீண்டும் வெடிவிபத்து ஏற்பட்டு 12 உயிர்களைப் பலி வாங்கிவிட்டது.
கூரையால் வேயப்பட்டுள்ள ஒரு இடத்தில் பட்டாசுத் தொழிற்சாலை நடத்துவதற்கு அரசு எப்படி லைசென்ஸ்வழங்கியது என்பது தான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையே ஆந்திர மாநிலம் ஹைதராபாத்திலும் இன்று அதிகாலை ஒரு பட்டாசுக் கடையில் தீவிபத்து ஏற்பட்டு,பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியும் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதால் தமிழகம் முழுவதிலும் உள்ள பட்டாசுத்தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசுக் கடைகளில் பாதுகாப்பு நிலை குறித்து தமிழக அரசு தீவிரமாகக் கண்காணிக்கவேண்டியது மிக மிக அவசியம்.
சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வெங்காய வெடிகள் வெடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவமேஇன்னும் மனதை விட்டு மறையாத நிலையில் மற்றொரு பட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications