கணவரை நடுரோட்டில் விட்டு விட்டு "எஸ்கேப்" ஆன அதிமுக எம்.எல்.ஏ
சென்னை:
கணவருடன் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அதிமுக பெண் எம்.எல்.ஏவான கருப்பாயி தன்கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நடுரோட்டில் காரை நிறுத்தி விட்டு பஸ்சில் ஏறி சென்னை வந்தார்.
குளத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பாயி. இவரது கணவர் கருப்பையா. இவருக்கு கருப்பாயி இரண்டாவதுமனைவி ஆவார்.
கருப்பையாவுடன் அவரது முதல் மனைவி தொடர்பாக கருப்பாயி அடிக்கடி சண்டை போடுவது வழக்கமாம்.
இந்நிலையில் சென்னையில் நடந்த அதிக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கணவர்கருப்பையா, அக்காள் மகன் மகேஷ் ஆகியோருடன் சென்னை நோக்கி காரில் கிளம்பினார் கருப்பாயி.
கார் மாத்தூர் என்ற இடத்தில் வந்தபோது, கருப்பையாவுக்கும் கருப்பாயிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.வாய்ச்சண்டை வலுக்கவே, திடீரென்று காரை நிறுத்தச் சொன்னார் கருப்பாயி. டிரைவர் குணாவும் காரைநிறுத்தினார்.
பின்னர் உடனே காரிலிருந்து இறங்கிய கருப்பாயி விடுவிடுவென்று நடந்து சென்று விட்டார். அப்போது அந்தவழியாக வந்த பஸ்சை நிறுத்தி சென்னைக்கு கிளம்பி விட்டார். அவர் பஸ் ஏறிச் சென்று விட்டது காரில்உள்ளவர்களுக்குத் தெரியாது.
காரிலிருந்து இறங்கிய கருப்பாயி நீண்ட நேரமாகியும் திரும்பாததால், காரை விட்டு இறங்கிய கருப்பையாவும்குணாவும் அவரைத் தேடிப் பார்த்தனர்.
ஆனால் அவரைக் காணாததால் பரபரப்படைந்த அவர்கள் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.போலீஸாருக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பின்னர் விசாரித்தபோது தான் கருப்பாயி தனியாக சென்னைக்கு கிளம்பி விட்டது தெரிய வந்தது. இதையடுத்துகருப்பையாவும், மகேஷும் மீண்டும் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications