மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள் உண்ணாவிரதம்
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கண்டித்து கிருஸ்தவ, முஸ்லீம் அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும்இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
சென்னை-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஆன்ட்ரூ பேராலய வளாகத்தில் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது.
காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை 4 மணி வரை நடக்கிறது.
அதைத் தொடர்ந்து கண்டன மாநாடு ஒன்றுக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் திமுக தலைவர்கருணாநிதி இதில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அவர் தவிர தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சங்கரய்யா, தற்போதைய பொதுச் செயலாளர் வரதராஜன்,பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் திருமாவளவன் மற்றும் இப்ராஹிம் சுலைமான் சேட் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
மதுரையில்...
இதற்கிடையே மதுரையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10,000க்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் மற்றும்முஸ்லீம்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை முன்னாள் எம்.பியான ராம்பாபு, மதிமுகவின் மெஹபூப் ஜான்,திமுகவின் பால்ராஜ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம்நடைபெற்று வருகிறது.
சிறுபான்மை பள்ளி ஊழியர்களும் பங்கேற்பு:
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் மீறி, தமிழகம் முழுவதிலும் கிறிஸ்தவ மற்றும்இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டு அதன் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஊழியர்கள் மட்டுமில்லாமல் அந்தக் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில்கலந்து காண்டுள்ளனர்.
சென்னையில் லயோலா கல்லூரி, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி உள்ளிட்ட கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள்மூடப்பட்டுள்ளன.
அதேபோல, மதுரையிலும் அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. யூ.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது.
கோயம்புத்தூரிலும் அனைத்து கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஓரளவு இஸ்லாமியக் கல்விநிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சிறுபான்மையினர் நடத்தி வரும்ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. பல சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் கறுப்புக்கொடிகள் கூட ஏற்பட்டிருந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 800 சிறுபான்மை பள்ளிகளில் 450 பள்ளிகள் வரை மூடப்பட்டிருந்தன.கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications