சென்னையில் கர்நாடக பஸ் மீது தாக்குதல்: பயணி காயம்
சென்னை:
கர்நாடக மாநிலம் கோலார் நகரிலிருந்து சென்னை வந்த கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் மீது கல்வீச்சுநடந்தது. இதில் ஒரு பயணி காயமடைந்தார்
காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழக வாகனங்கள் கர்நாடகத்தில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன.பெங்களூரில் அவ்வளவாக இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. ஆனால், மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர்ஆகிய இடங்களில் தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதும், எரிக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது.
அதே நேரத்தில் தமிழகத்தில் கர்நாடக பஸ்களை தாக்குவது போன்ற தவறான செயல்கள் நடைபெறவில்லை.ஆனால், நேற்று முதல் முறையாக சென்னையில் கர்நாடக அரசு பஸ் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.
கோலாரிலிருந்து சென்னை வந்த கர்நாடக அரசு பஸ், வெள்ளிக்கிழமை அதிகாலை அமைந்தகரை பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது ஒரு கும்பல் திடீரென்று பஸ் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது.
இதனால் பஸ் டிரைவர் அதிர்ந்து போய் பஸ்சை நிறுத்தினார். இதைத் தொடர்ந்து பஸ் மீது சரமாரியாக கற்கள்வீசப்பட்டன. இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடிகள் உடைந்தன.
இதில், பஸ்சின் முன் பக்கம் அமர்ந்திருந்த ஒரு பயணி காயமடைந்தார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்துஓடிவிட்டது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
-->












Click it and Unblock the Notifications