கொளத்தூர் மணிக்கு ஜாமீன்: வீரப்பனிடம் தூது செல்வாரா?

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

தூதராக வர வேண்டும் என்று வீரப்பனால் கோரப்பட்ட கொளத்தூர் மணிக்கு மைசூர் தடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

வீரப்பனுக்கு உதவியதாகக் கூறி கொளத்தூர் மணியை கர்நாடக அதிரடிப்படை கைது செய்து பெல்லாரி சிறையில் அடைத்துள்ளது.

இந் நிலையில் தன்னால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை விடுவிக்க வேண்டுமானால் கொளத்தூர் மணியைத் தான்தூதுவராக அனுப்ப வேண்டும் என வீரப்பன் நிபந்தனை விதித்துள்ளான்.

சிறையில் இருக்கும் மணியை தூதுவராக அனுப்ப இயலாது என கர்நாடகம் கூறியது. ஆனால், வீரப்பன் தரப்பில் இதற்கு எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது. தான் அனுப்பிய லேட்டஸ்ட் கேசட்டிலும் கூட கொளத்தூர் மணி தான் காட்டுக்குள் வர வேண்டும் என வீரப்பன்நிபந்தனை விதித்திருந்தான்.

இந் நிலையில் கொளத்தூர் மணியின் தடா வழக்கை விசாரித்து வரும் மைசூர் மாவட்ட முதன்மை நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கஉத்தரவிட்டார்.

மணியின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மணி கைதாகி 6 மாதங்களாக சிறையில் இருந்துவிட்டார், இன்னும் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அவர் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.

அவரை ஜாமீனில் விட அரசு வழக்கறிஞர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து அவரை ஜாமீனில் விடுவதாக நீதிபதி அறிவித்தார்.

கொளத்தூர் மணியை தூதுவராக அனுப்ப கர்நாடக அரசு ஒப்புக் கொண்டதால் தான் அவரது ஜாமீன் மனுவுக்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்புதெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

மணி மீது மேலும் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 2 வழக்குகளில் ஜாமீன் மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில்விசாரணையில் உள்ளன.

இதில் எல்லாம் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே மணியை காட்டுக்குள் அனுப்புவது குறித்து அரசு யோசிக்கவே முடியும்.

இந் நிலையில், நாகப்பா கடத்தப்பட்ட இன்றுடன் 62 நாட்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வீரப்பனால் கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் உச்ச நீதிமன்றத்துக்கு பேக்ஸ் மூலம்ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில் கொளத்தூர் மணியை மைசூர் தடா நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது தவறு என்றும் அந்த ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கரீம் கோரியுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+