கோஷ்டியை தூண்டிவிடும் கிருஷ்ணா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் முதல்வர் கிருஷ்ணாவுக்கு உறுதுணையாகநிற்போம் என அவரது கோஷ்டியைச் சேர்ந்த அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

தீர்ப்பு அரசுக்கு பாதகமாக வந்தால் தன்னை மாற்றிவிட்டு வேறு யாரையாவது முதல்வராக்க காங்கிரஸ் தலைமை முயற்சிக்கலாம் என்பதால்அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது கோஷ்டியைச் சேரந்த அமைச்சர்களை கூட்டம் போட வைத்துள்ளார் கிருஷ்ணா.

நேற்று சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது ஆதரவு கோஷ்டியின் கூட்டம் பெங்களூரில்நடந்தது. தீவிர கிருஷ்ணா ஆதரவாளரான அமைச்சர் சிவக்குமாரின் வீட்டில் இந்தக் கூட்டம் நடந்தது.

இதில் சுமார் 18 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால், மூத்த அமைச்சர்களான தரம் சிங், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர்பங்கேற்கவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் கிருஷ்ணாவை மாற்றிவிட்டு வேறு ஒருவரை முதல்வராக்க சோனியா காந்தி முயலலாம்என்று கருதப்படும் நேரத்தில் இந்தக் கூட்டம் நடந்துள்ளது.

கூட்டத்தின் முடிவில் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா கோஷ்டி அமைச்சர்கள், இந்த நெருக்கடியான நேரத்தில் முதல்வருக்கு நாங்கள் முழுஆதரவு அளிக்கிறோம். கட்சித் தலைமையும் (சோனியா) அவருக்கு முழு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விவகாரத்தில் கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டாம். தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதில்லை என்ற முடிவுகிருஷ்ணா மட்டும் எடுத்த முடிவல்ல. ஒட்டுமொத்த அமைச்சரவையின் முடிவு இது என்றனர்.

காங்கிரஸ் மேலிடம் முதல்வரை மாற்றினால் அதை எதிர்ப்பீர்களா என்று கேட்டபோது, தலைமைக்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஆனால்,அது போன்ற ஒரு சூழல் இன்றும் உருவாகவில்லை என்றனர்.

கிருஷ்ணா டெல்லியில் இருக்கும் நிலையில் பெங்களூர் ஒவ்வொரு கோஷ்டித் தலைவர்களும் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்துப்பேசி வருகின்றனர்.

தரம் சிங், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரின் வீடுகளில் ஏராளமான எம்.எல்.ஏக்கள் தனித்தனியே கூடி ஆலோசனை நடத்திவருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+