வாழப்பாடியில் நாளை உடல் தகனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் உடல் நாளை அவருடைய சொந்த ஊரான வாழப்பாடியில் தகனம்செய்யப்படுகிறது.

மாரடைப்பு காரணமாக நேற்று மாலை சுமார் 4.30 மணிக்கு வாழப்பாடியார் சென்னையில் மரணமடைந்தார்.

அவரது உடல் சென்னை-அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள வாழப்பாடியாரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் வாழப்பாடியாரின் உடல் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும், கட்சித்தொண்டர்களும், பொதுமக்களும் அங்கு வந்து மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இன்று பிற்பகல் அவருடைய சொந்த ஊரான வாழப்பாடிக்கு வேன் மூலம் ராமமூர்த்தியில் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. நாளை அவருடைய உடல் அங்கேயே தகனம் செய்யப்படுகிறது.

நாளைய இறுதிச் சடங்கில் காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர்கள் ரமேஷ் சென்னிதாலா,ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள் தவிர தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் மற்றும் செயல் தலைவர் இளங்கோவன்ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+