வாஜ்பாய், கருணாநிதி இரங்கல்
சென்னை:
வாழப்பாடி ராமமூர்த்தி மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாஜ்பாய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் நலனுக்காக அயராதுபாடுபட்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
அவரது மறைவின் மூலம் சிறந்த தொழிற்சங்கவாதியை நாடு இழந்து விட்டது என்று கூறியுள்ளார் வாஜ்பாய்.
கருணாநிதி:
கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வாழப்பாடியாரின் மறைவு பெரும் துயரத்தைஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட முறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு இது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முரசொலி மாறனைப் பார்க்க சனிக்கிழமை தான் வந்திருந்தார்வாழப்பாடியார். என்னுடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்றார். இப்போது அவர் இல்லைஎன்பது பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சிறந்த நண்பராக விளங்கியவர் வாழப்பாடியார். அவரதுகுடும்பத்திற்கு, எனது சார்பிலும் திமுக சார்பிலும் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
சோனியா காந்தி:
சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக விளங்கியவர்வாழப்பாடி ராமமூர்த்தி.
அவரது மறைவின் மூலம் செல்வாக்கு மிக்க தலைவரை காங்கிரஸ் இழந்து விட்டது என்று கூறியுள்ளார் சோனியாகாந்தி.
ஜெயலலிதா:
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தவர் வாழப்பாடியார்.தொழிற்சங்கவாதியாக திறம்பட செயல்பட்டவர்.
தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபட்டவர். அவரது இழப்பு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
தமிழக ஆளுநர்:
வாழப்பாடியாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
வாழப்பாடியாரின் திடீர் மறைவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு சிறந்த தொழிற்சங்கவாதியை நாடுஇழந்து விட்டது.
அவருடைய மறைவு நாட்டுக்கும் தொழில்துறைக்கும் ஏற்பட்ட பெரும் இழப்பாகும் என்று கூறியுள்ளார் தமிழகஆளுநர்.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், டாக்டர் கிருஷ்ணசாமி, எஸ்.கண்ணப்பன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல. கணேசன், மதிமுக அவைத்தலைவர் எல். கணேசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் சோ. பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலைவாழப்பாடியார் வீட்டுக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கருணாநதி இன்று காலை சென்றுஅஞ்சலி செலுத்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications