கன்னட படப்பிடிப்பில் தமிழக கலைஞர்கள் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கன்னட படப்பிடிப்பில் தமிழில் பேசிய தொழில்நுட்பக் கலைஞர்கள் தாக்கப்பட்டனர்.

கன்னட சினிமாவின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே தமிழகம் அல்லது ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான்.

பெரும்பாலும் தமிழக டெக்னீஷியன்களை நம்பித் தான் கன்னட சினிமாவே உள்ளது. இதனால் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், உபேந்திராஉள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் தமிழக தொழில்நுட்பக் கலைஞர்களைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந் நிலையில் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ்குமார் நடித்து வரும் டான் என்ற படத்தில் படப்பிடிப்பு சிக்மகளூரில் நடந்து வருகிறது.இங்கு படப்பிடிப்பில் தமிழக தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சிவராஜ்குமார் தமிழில் பேசிக் கொண்டிருந்தார். (ராஜ்குமார் குடும்பமேசென்னையில் தான் 30 ஆண்டுகள் வசித்தது. கடந்த 10 ஆண்டுகளாகத் தான் இவர்கள் பெங்களூரில் வசிக்கின்றனர்).

அப்போது படப் பிடிப்பை பார்க்க வந்தவர்கள் கன்னட படப்பிடிப்பில் தமிழர்கள் இருப்பதா, அவர்களுடன் தமிழில் பேசுவதா என்று கேட்டுகலாட்டா செய்தனர்.

பின்னர் திடீரென தமிழக தொழில்நுட்பக் குழுவினரை அக் கும்பல் தாக்கியது. இதைத் தடுக்க வந்த சிவராஜ்குமாருக்கும் திட்டு விழுந்தது.

இதையடுத்து படப்பிடிப்பு பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. அனைவரும் உடனே வாகனங்களில் பெங்களூர் புறப்பட்டனர். அப்போதுபடப்பிடிப்புக் குழுவினரின் கார் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது.

எங்கள் மீது தாக்குதல் நடந்தபோது பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர் என தமிழகதொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் தெரிவித்தார்.

தங்களது படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக கன்னட மக்களிடையே தமிழ் எதிர்ப்பை தூண்டிவிட்டவர்கள் தான் இப்போதைய முன்னணிகன்னட நடிகர்கள். இதில் ராஜ்குமாரும் அடக்கம். இதற்காக இவர்களது படங்களில் காவிரி குறித்த உணர்ச்சிப் பாடல்கள் கட்டாயம் இடம்பெறுவது வழக்கம்.

ஆனால், தங்கள் படங்களை ஒழுங்காக எடுத்துத் தரும் திறமை தமிழக தொழில்நுட்பக் கலைஞர்களிடம் தான் உள்ளது என்பதால்அவர்களைத் தான் முழுக்க முழுக்க பயன்படுத்தி வருகின்றனர்.

இப்போது தமிழக கலைஞர்களுக்கு அடியும் வாங்கித் தந்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+