தாய்லாந்து செல்ல புலிகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்
கொழும்பு:
தாய்லாந்தில் நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காகச் செல்லும் விடுதலைப் புலிகளுக்குஇலங்கை அரசு முதல் முறையாக பாஸ்போர்ட் வழங்கியுள்ளது.
கடந்த மாதம் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தாய்லாந்தின் சத்தாஹிப் துறைமுக நகரில் முதற்கட்டப்பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. புலிகளின் சார்பில் அதன் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம்உள்ளிட்ட நான்கு பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வரும் 31ம் தேதி தாய்லாந்தில் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தைகள் துவங்குகின்றன. இதில்புலிகளின் சார்பில் மேலும் இரண்டு பேர் கலந்து கொள்வார்கள் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப. தமிழ்ச் செல்வன் மற்றும் புலிகளின் வடகிழக்கு ராணுவ கமாண்டர்கருணா ஆகியோர் தான் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்குப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக புதிய கூட்டுப் படைகளை அமைப்பதுகுறித்து தான் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. அதற்காகத் தான்இவர்கள் இருவரையும் பேச்சுவார்த்தையில் சேர்க்க பிரபாகரன் முடிவு செய்தார்.
தமிழ்ச் செல்வனுக்கும் கருணாவுக்கும் பாஸ்போர்ட் தர இலங்கை அரசு முன் வந்தது. அவர்களுடையபாஸ்போர்ட்டுகளும் தயாராகி விட்டன.
நாளை அதிகாலை இலங்கை அரசின் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வன்னி பகுதியிலிருந்து புலிகளின்பேச்சுவார்த்தைக் குழுவினர் கொழும்பு வந்து சேர்வார்கள்.
கொழும்பு விமான நிலையத்தை வந்து அடைந்தவுடன் அவர்களுக்குரிய பாஸ்போர்ட் வழங்கப்படும். அதன்பின்னர் அவர்கள் உடனடியாக தாய்லாந்து கிளம்பிச் செல்வார்கள்.
நவம்பர் 3ம் தேதி வரை நடைபெறவுள்ள இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை பாங்காக்கிலிருந்து 32 கி.மீ.தொலைவில் உள்ள நாதோர்ன் பாதோம் என்ற ஓய்வு விடுதியில் நடைபெறவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications