காவிரி நீர் நாளை மேட்டூர் வரும்
மேட்டூர்:
கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறந்து விட்டதாக கூறப்படும் தண்ணீர் நாளை மேட்டூர்அணையை வந்தடையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் கடுமையான சாடலைத் தொடர்ந்து கர்நாடகம் காவிரி நீரைத் திறந்து விட்டுள்ளது.கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்த அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 48 முதல் 52 மணி நேரங்களில் மேட்டூர்அணையை வந்தடையும். அந்தக் கணக்குப்படி நாளைக்குள் கபினி நீர் மேட்டூர் வந்தடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் காவிரியில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறித்து கர்நாடகத் தரப்பிலிருந்து எந்தவித தகவலும் தமிழகபொதுப்பணித்துறைக்கு வரவில்லை.
ஆனால் தற்போது மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதைப் பார்க்கும் போதுகர்நாடகத் தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருப்பது உறுதியாகிறது.
அணைக்கு வரும் நீரின் வரத்து விநாடிக்கு 12,288 கன அடியாக உள்ளது. வெளியேறும் நீரின் அளவு விநாடிக்கு2,334 கன அடியாகும்.
அணையின் நீர்மட்டம் 44.72 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 120 அடியாகும்.
கடந்த ஆண்டு இதே நாளில் 76 அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு விநாடிக்கு 46,758 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications