இலங்கை: நாளை முதல் 2வது கட்ட அமைதிப் பேச்சு
பாங்காக்:
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 2வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளைதாய்லாந்தில் தொடங்குகின்றன.
நேற்று இரவே வன்னி பகுதியிலிருந்து இரண்டு இலங்கை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பேச்சுவார்த்தையில்பங்கேற்கவுள்ள புலிகள் கொழும்பு வந்து சேர்ந்தனர். நார்வே தூதர் இல்லத்தில் அவர்களுக்கு இரவு விருந்துஅளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக் குழுவில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கும், வடகிழக்கு ராணுவ புலிகள் கமாண்டர் கருணாவுக்கும் இன்று அதிகாலை கொழும்பு விமானநிலையத்தில் இலங்கை அரசு ஏற்பாடு செய்த பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.
பின்னர் ஆன்டன் பாலசிங்கம் தலைமையிலான புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் ஒன்பது பேரும், அமைச்சர்ஜி.எல். பெய்ரிஸ் தலைமையிலான இலங்கை அரசின் 16 பேச்சுவார்த்தைக் குழுவினரும் ஒரே விமானத்தில்தாய்லாந்துக்குக் கிளம்பினர்.
முதற்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து முடிந்ததைப் போலவே இரண்டாவது கட்டப் பேச்சுக்களும்வெற்றி பெறும் என்று பாங்காக் சென்று கொண்டிருக்கும் போதே விமானத்தில் பாலசிங்கம் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்தே இலங்கையில் அமைதிக்கான அனைத்து முயற்சிகளும் படிப்படியாகநடந்து வருகின்றன. அவற்றியில் வெற்றியும் கண்டு வருகிறோம். அதே போலவே இந்த இரண்டாவது கட்டப்பேச்சுக்களும் வெற்றி பெறும் என்றும் பாலசிங்கம் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளின் எதிரொலியாக வடகிழக்கு இலங்கை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன்இருப்பதை என்னால் பார்க்க முடிந்ததும் என்றும் அவர் கூறினார்.
நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை பாங்காக்கிலிருந்து 32கி.மீ. தொலைவில் உள்ள நாகோர்ன் பாதோம் ஓய்வு விடுதியின் "ரோஸ் கார்டன்" ஓட்டலில் நடைபெறவுள்ளது.நாளை பகல் உணவு முடிந்த பின்னர் பேச்சுக்கள் தொடங்குகின்றன.
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இரு தரப்பினர் சார்பிலும்கூட்டுப் படைகளை அமைப்பது குறித்து தான் இந்த இரண்டாவது கட்டப் பேச்சுக்களின் போது விவாதிக்கப்படஉள்ளது.
இதற்கிடையே இலங்கை சீரமைப்புப் பணிகளுக்காக நிதி திரட்டும் மாநாடு ஒன்று வரும் நவம்பர் 25ம் தேதிநார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் என்று பெய்ரிஸ் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications