சவுதியில் வெளிநாட்டினர் டாக்சி டிரைவர்களாக பணியாற்ற தடை
துபாய்:
சவுதி அரேபியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் டாக்சிகளை ஓட்ட தடை விதிக்கப்படவுள்ளது. இதனால்ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் இந்தத் தடையை சவுதி அரசு கொண்டு வர உள்ளது. இந்தத் தடை 6மாதத்துக்குள் அமலுக்கு வர உள்ளது.
சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் இந்த முடிவை எடுத்துள்ளார். 6 மாதத்துக்குள் அனைத்து வெளிநாட்டினரையும்டாக்சி டிரைவர் பணியில் இருந்து நீக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பின்னர் வெளிநாட்டினர் ஒருவர் கூட சவுதியில் எக்காரணம் கொண்டும் டாக்சி ஓட்டக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கா இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் லிமோசின் உள்படபல்வேறு வகையான டாக்சிகளை ஓட்டி வருகின்றனர். இந் நிலையில் அந்நாட்டின் இந்த முடிவால் இவர்கள் அனைவரும்ஒட்டுமொத்தமாக வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ரியாத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னர் மன்னர் வெளியிட்ட உத்தரவில்,சவுதியில் வெளிநாட்டினர் டாக்சிகள் ஓட்டுவதை தடை செய்ய வேண்டிய பொறுப்பை உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளும்.
செய்தித்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்தத் தடையை அமலாக்க வேண்டும். அதை மீறி தொடர்ந்து டாக்சிஓட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல ஹஜ் புனிதப் பயணம் செய்யவும், உம்ரா செய்யவும், தொழில் தொடர்பாகவும் சவுதிக்கு வர குழுவாக விசா கேட்டால்அதை நிராகரிக்குமாறும் வெளியுறவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனித்தனியே தான் விசா கேட்டு விண்ணப்பிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பல்வேறு பணிகள் உள்நாட்டினருக்கே ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதில் டாக்சி டிரைவர் பணியும்சேர்க்கப்பட்டுவிட்டது.
சமீபத்தில் தான் ஓமன் நாட்டின் சில துறைகளின் டிரைவர் பணி உள்நாட்டினருக்கு ஒதுக்கப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications