ஜெயாவை சந்திக்கிறார் ரஜினி
சென்னை:
தென்னக நதிகளை இணைப்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க நடிகர்ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.
நதிகள் இணைப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கவும் ரஜினிமுடிவு செய்துள்ளதாக "தி ஹிந்து" ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க நதிகள் இணைப்பு ஒன்று மட்டுமேநிரந்தரத் தீர்வாக முடியும்.
எனவே நதிகள் இணைப்பு குறித்த விழிப்புணர்வு உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக மக்கள்இயக்கம் ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளேன்.
அதன் ஒரு கட்டமாக ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய், எதிர்க் கட்சித் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து பேசவுள்ளேன்.
உடனடியாக "தீபகற்ப நதி மேம்பாட்டு ஆணையம்" என்ற அமைப்பை பிரதமர் வாஜ்பாய் உருவாக்க வேண்டும்.நதிகளை இணைப்பதற்கு ரூ.1 லட்சம் கோடி பணம் தேவைப்பட்டாலும் பரவாயில்லை. அதைக் கண்டிப்பாக திரட்டிவிட முடியும்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு தொடர்பாக ஆந்திர மற்றும் கர்நாடக முதல்வர்களுடன் ஏற்கனவே தொடர்புகொண்டு பேசி வருகிறேன்.
விரைவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசுவேன் என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்ரஜினி.
அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் என்ன நடக்கும், எப்படி இருப்பேன் என்பதைஇப்போதே கூற முடியாது. எனக்கு தெரியாது, எல்லாம் ஆண்டவன் செயல் என்று ரஜினி கூறியுள்ளார்.
-->


Click it and Unblock the Notifications
