இலங்கை நீதிமன்றத்தின் கடும் தீர்ப்புக்கு இடையே அமைதி பேச்சு தொடர்கிறது
நாகோம் பதோம் (தாய்லாந்து):
புலிகள்- அரசுக்கு இடையிலான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை இன்று இரண்டாவது நாளை எட்டியது.
இந் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 200 ஆண்டு சிறை தண்டனை விதித்து இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.
தாய்லாந்தின் நகோம் பதோம் நகர ஓய்வு விடுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இலங்கையில் சென்ட்ரல் பாங்க் கட்டத்தை குண்டுகள் நிரப்பிய லாரியைக் கொண்டு புலிகள் தாக்கி அழித்த வழக்கில் பிரபாகரனுக்கு 200ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். அந்தத் தாக்குதலில் 91 பேர் இறந்தனர். 300 பேர்படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு காரணமாக பேச்சுவார்த்தைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என இலங்கை அரசு கூறியுள்ளது.
ஆனால், இந்தத் தீர்ப்பு குறித்து புலிகள் தரப்பில் கோபம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிப்படையாக எந்தக் கருத்தும்தெரிவிக்காத ஆண்டன் பாலசிங்கம் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவினர் இலங்கை அரசுப் பிரதிநிதிகளிடம் தங்களதுகோபத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இன்று நடந்த பேச்சுவார்த்தையில், வட கிழக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சீரமைக்க கூட்டுக் குழுக்களைஅமைக்கவும், இதற்காக வெளிநாட்டு நிதியுதவியைக் கோரவும் இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.
இந்தக் கமிட்டிகளில் முஸ்லீம்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கை மறு சீரமைப்புக்கும் குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் வட கிழக்குப் பகுதியில் குடியமர்த்தவும் தேவைப்படும்நிதியைத் திரட்ட வரும் 25ம் தேதி ஓஸ்லோவில் நிதியுதவி செய்யும் நாடுகளின் மாநாட்டை நடத்த நார்வே முடிவு செய்துள்ளது.
நேற்றைய பேச்சுவார்த்தைகளில் வடகிழக்கு இலங்கையில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் இரு தரப்பினருக்கும்இடையே முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என ஆண்டன் பாலசிங்கம்தெரிவித்ததாக அரசுப் பிரதிநிதிகள் கூறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications