நதிகள் இணைப்பு: மத்திய அரசு மிக முக்கிய முடிவு
டெல்லி:
நாட்டில் உள்ள 10 முக்கிய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்துநதிகள் இணைப்பு குறித்து மத்திய அரசு முக்கிய முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக ரஞ்சித் குமார் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கிர்பால்,நீதிபதி அரிஜித் பசாயத், நீதிபதி சபர்வால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞச் வழங்கிய தீர்ப்பின் விவரம்:
வட இந்திய நதிகளில் வெள்ளப் பெருக்கையும் தென்னிந்தியாவில் நிலவும் வறட்சியையும் ஒழிக்கும் வகையில் இந்த நதிகள் இணைப்புத்திட்டத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்துக்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் ஒரு கடுமையான சட்டத்தைக் கூட மத்திய அரசு கொண்டுவரலாம்.
இதற்கான பணிகளை 10 ஆண்டுகளுக்கும் முடிக்க மத்திய அரசு முயல வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நதிகள்இணைப்புக்கான விரைவு செயல் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஏற்கனவே நதிகள் இணைப்பு குறித்து ஒரு திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. இதன்படி மொத்தம் 4 கட்டமாக நதிகளை இணைக்க முடியும்.
முதல் கட்டமாக மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரியை இணைப்பது. இரண்டாவதாக பீமா, கிருஷ்ணா, கோதாவரி, தபி நதிகளைஇணைப்பது. மூன்றாவதாக கங்கை, மகாநதி, பிரம்மபுத்திரா நதிகளை இணப்பது. நான்காவதாக யமுனையையும் சபர்மதி நதியையும்இணைப்பது.
இதன்மூலம் தேசிய அளவில் ஒரு புதிய நதிக் கட்டமைப்பு உருவாகிவிடும். ஆனால், இதனால் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயரவேண்டிய நிலை ஏற்படும் எனவும், நதிகளின் இயற்கைப் போக்கை மாற்றுவதால் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படும் எனவும் பலசூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூறியுள்ளன.
நதிகளை இணைக்க மத்திய அரசு முடிவு?
இதற்கிடையே, நாட்டின் நதிகளை இணைப்பது குறித்து விரைவில் பிரதமர் வாஜ்பாய் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என துணைப்பிரதமர் அத்வானி கூறியுள்ளார்.
டெல்லியில் பா.ஜ.க. மகளிர் அணியின் கூட்டத்தில் பேசிய அத்வானி,
தேசிய நதிகளை இணைத்து வெள்ளத்தையும் வறட்சியையும் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான முக்கிய அறிவிப்பு விரைவில்வெளியாகும். 30 ஆண்டுகளுக்கு முன் பாசன அமைச்சராக இருந்த கே.எல். ராவ் தான் நதிகள் இணைப்பு என்ற கனவுத் திட்டம் குறித்துமுதலில் பேசினார்.
1980ம் ஆண்டில் இருந்தே இந்தத் திட்டம் குறித்து பலவித ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளை எங்கள் அரசு இப்போதுபரிசீலனையில் எடுத்துக் கொண்டுள்ளது. மேலும் பல தகவல்களையும் திரட்டியுள்ளோம். நதிகள் இணைப்பு குறித்த முக்கியமானஅறிவிப்பை வாஜ்பாய் விரைவில் வெளியிட உள்ளார் என்றார் அத்வானி.
நதிகளை இணைக்க விரைவு செயல் குழுவை அமைத்து இந்தப் பணியை 2012 ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ள நிலையில் அத்வானி இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்மூலம் நதிகளை இணைக்கும் பணியைத் துவங்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications