தமிழகத்தில் காலரா பரவும் அபாயம்
சென்னை:
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்கள் பரவலாம்என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழக சுகாதாரத் துறை பொதுமக்களைஎச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் கொசுக்கள்பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள் மூலம் பலவகை நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது.
இதனால் நீர் தேங்கி இருக்கும் இடத்தில் உடனடியாக அதிகாரிகள் மருந்து தெளிக்க வேண்டும். இதில் மெத்தனம்காட்ட வேண்டாம்.
மக்கள் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டிய பிறகே பயன்படுத்த வேண்டும்.
உடைந்த குடிநீர்க் குழாய்கள் மூலம் கிடைக்கும் குடிநீரைப் பயன்படுத்த வேண்டாம். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால்,உப்பு நீர்க் கரைசலைக் குடிக்க வேண்டும். உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளது.
நிவாரணப் பணிகள் தீவிரம்:
அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிவாரணப் பணிகள்தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு நிவாரணப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது. ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் வீடின்றி தவித்துவருகின்றனர்.
மாநகராட்சிப் பள்ளிகளுக்கு விடுறை அளிக்கப்பட்டு அந்தப் பள்ளிகளில், குடிசைகள், வீடுகளை இழந்தோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நிவாரண கூடங்களில் உணவு சமைக்கப்பட்டு அவை பாதிக்கப்பட்டோருக்க வினியோகிக்கப்படுகிறது.
அமைச்சர் பார்வை:
இந் நிலையில் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் சம்பத், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புளியந்தோப்புஉள்ளிட்ட சில பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உடை ஆகியவற்றை வழங்கினார்.
அவருடன் துணை மேயர் கராத்தே தியாகராஜன், குடிசை மாற்று வாரியத் தலைவர் பாலகங்கா உள்ளிட்டோர்உடன் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் சம்பத் பேசுகையில், இந்த கன மழையால் சென்னைக்கு மட்டும்இன்னும் 3 மாதங்களுக்குத் தேவையான அளவுக்கு குடிநீர் கிடைத்துள்ளது.
தண்ணீர் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் அதை அகற்றும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. திமுகஆட்சிக்காலத்தில் ரூ. 25 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட மழை வடிகால் திட்டம் முறையாக செய்யப்படாதகாரணத்தால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.வேகமாய் நிரம்பி வரும் தமிழக அணைக் கட்டுகள்


Click it and Unblock the Notifications
